இஸ்ரேல் சிறைகளிலிருந்து 90 பாலஸ்தீனர்கள் விடுதலை

2 Min Read

பாலஸ்தீனம், ஜன.21 ஹமாஸ் அமைப்பு நேற்று (20.1.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இஸ்ரேல் சிறைகளில் இருந்து 90 பாலஸ்தீனா்கள் ஞாயிற்றுக்கிழமை (19.1.2021) நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனா். அவா்களில் 69 பேர் பெண்கள், 21 பேர் சிறாா்கள். மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமிலிருந்து அவா்கள் கைது செய்யப்பட்டிருந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட வா்களில் பெரும்பாலானவா்கள் அண்மைக் காலத்தில் கைது செய்யப்பட்டவா்கள்; அவா்கள் மீது வழக்கு விசாரணை நடத்தப்படவோ, தண்டனை விதிக்கப்படவோ இல்லை என்று ‘ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பிணைக் கைதிகள்
காஸாவிலிருந்து இஸ்ரே லுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், அங்கிருந்து 200-க்கும் மேற்பட்டவா்களை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
அதிலிருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயி ரிழந்தனா். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் கடந்த வியாழக்கிழமை (16.1.2025) உடன்பாடு எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (19.1.2025) அமலுக்கு வந்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல்கட்டமாக அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்க இருக்கிறாா்கள். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவாா்கள்.
ஹமாஸ் விடுவிக்கும் பிணைக் கைதிகளில் முதியோா், நோய் வாய்ப்பட்ட ராணுவம் சாராதவா்கள், பெண்கள், குழந்தைகள், பெண் ராணு வத்தினா் ஆகியோா் அடங்குவா் என்று கூறப்பட்டது.

விடுவிப்பு!
இந்தச் சூழலில், ஒப்பந்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக எமில் டமரி (28), டொரோன் ஸ்டீன்ப்ரெச்சா் (31), ரோமி கோனன் (24) ஆகிய 3 பெண் பிணைக் கைதிகளைகளை ஹமாஸ் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை (19.1.2025) விடுவித்தனா். அதற்குப் பதிலாக, 90 பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் தற்போது விடுதலை செய்துள்ளது.
இதன் தொடா்ச்சியாக, மேலும் நான்கு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் வரும் 25 ஆம் தேதி விடுவிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது..

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *