ஒப்புக் கொண்டுள்ளது!
*தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை:
ஈ.வெ.ரா.வை சீமான் விமர்சிக்கும்போது, பா.ஜ.க.வினர் கண்டிக்கமாட்டார்கள். பா.ஜ.க.வின் செயல் திட்டங்களையே சீமான் நடைமுறைப்படுத்துகிறார். பா.ஜ.க.வின் ஊன்றுகோலாக சீமான் இருக்கிறார். ஈ.வெ.ரா.வை விமர்சித்துவிட்டு,
ஈரோட்டில் எப்படி சீமானால் ஓட்டு கேட்க முடியும்?
டவுட் தனபாலு: பல கட்சிகள் மாறி காங்கிரசுக்கு வந்த தங்களுக்கு, ஈ.வெ.ரா., வரலாறு தெரியாதுபோலும்…. ஏன்னா, ஈ.வெ.ரா. ஒரு காலத்துல உங்க காங்கிரஸ்ல தான் இருந்தார்… அங்கு நிலவிய ஜாதி பேதங்களை எதிர்த்து வெளியே வந்து, தனி இயக்கம் துவங்கினாரு என்ற உண்மை தெரியாமலே, அவருக்கு வக்காலத்து வாங்குறீங்களோ என்ற, ‘டவுட்‘ வருதே!
‘தினமலர்‘, 17.1.2025, பக்கம் 8)
* காலந்தாழ்ந்தாவது ஜாதி, பேதங்களை எதிர்த்து பெரியார் காங்கிரசை விட்டு வெளி வந்தார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது ‘தினமலர்’. எங்கு சுற்றினாலும் இந்த இடத்துக்கு வந்துதானே தீரவேண்டும்.
தந்தை பெரியார் காலத்தில் இருந்த காங்கிரஸ் பார்ப்பனர்கள் வகுப்புவாரி உரிமையை எதிர்த்து வந்தனர். இன்றைய தினம் சமூகநீதிக்காகக் காங்கிரஸ் போர்க் குரல் கொடுக்கிறது. காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி 50 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற அளவுகோலை ஒழிப்போம் என்றும், ஒன்றிய அரசில் 90 செயலாளர்கள் இருக்கிறார்கள்; அதில் ஓபிசி மூன்றே பேர் என்றும், செய்தியாளர்களைச் சந்தித்தபோது உங்களில் எத்தனைப் பேர் ஓபிசி என்றும் கேட்டாரே!
காங்கிரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதால்தான் ‘தினமலர்’களுக்கு வாந்தியும், பேதியும் ஏற்படுகிறதோ!