தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள்
வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், “வெற்றி முழக்கம்” தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன் விவரம் வருமாறு:
நாகை – வேளாங்கண்ணி
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி திராவிடர் உணவகம் எதிரில் தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாள் – “வைக்கம் வெற்றி முழக்கம்” தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்க கழகப் பொதுக் கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
நாகை மாவட்ட கழக தலைவர் வி.எஸ்டி.ஏ.நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன் அனைவரையும் தொடக்கத்தில் வரவேற்று உரையாற்றினார்.
நாகை மாவட்ட கழக செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, கீழையூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் வேளாங்கண்ணி பேரூராட்சி யின் துணைத் தலைவர் அ.தாமஸ் ஆல்வா எடிசன், தி.மு.க வேளாங்கண்ணி பேரூராட்சி செயலாளர் மரிய சார்லஸ், வேளாங்கண்ணி பேரூராட்சியின் தலைவர் அ.டயானா சர்மிளா, கீழையூர் ஒன்றிய கழகத்தின் தலைவர் ரெ.ரெங்கநாதன், நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி கூட்டத்தினை தொகுத்து வழங்கினார். மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் நாகை மு.இளமாறன் கூட்டத்தில் தொடக்க உரையாற்றினார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வைக்கம் போராட்ட வரலாற்றையும், திராவிடர் கழகத் தோழர்களின் தியாகத்தையும், திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார். தி.மு.க நாகை மாவட்ட செயலாளர் – தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கவுதமன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன், மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் அனாஸ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் அகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தின் இறுதியில் திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் மு.குட்டிமணி நன்றியுரையாற்றினார். மாவட்ட கழக சார்பில் கூட்டத்தில் பங்கேற் றோர்க்கு பயனாடையும், தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் புத்தகமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் அய்யப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சர்ஜித், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ஜெயப்பிரியா, திருமருகல் ஒன்றிய துணை தலைவர் ப.காமராஜ், மாவட்ட நாகை நகர அமைப் பாளர் சண்.ரவி, நாகை நகர மாணவர் கழக துணை அமைப்பாளர் செ. அறிவுச்செல்வன் மற்றும் கழகத் தோழர்களும், தி.மு.க ஒன்றிய பிரதிநிதிகள், பேரூர் கழக உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்துக் கொண்டு சிறப் பித்தனர்.
நீடாமங்கலம்
தந்தை பெரியார் 51 ஆம் நினைவு நாள், வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு முதலமைச்சர், கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் 24.12.2024 அன்று மாலை 6 மணி அளவில் மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் நகரத்தில் பெரியார் சிலை அருகில் சிறப்புடன் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கழக ஒன்றியச் செயலாளர் ச.அய்யப்பன். வரவேற்புரை ஆற்றினார். கழக பொதுக்குழு உறுப்பினர் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. ப.சிவ ஞானம். தலைமை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் கோ.கணேசன், ப.க. மாநிலச் செயலாளர் .சி.இரமேஷ். ப.க. மாவட்டச் செயலாளர் த.வீரமணி, மன்னை ஒன்றிய கழக. தலைவர் மு.தமிழ்ச்செல்வம், மாவட்ட கழக துணைச் செயலாளர் வி.புட்பநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து கருத்துரையாற்றினர். கூட்ட துவக்கத்தில் கழகப் பேச்சாளர் சில்லத்தூர் சிற்றரசு தொடக்கவுரை ஆற்றினார்.
தொடர்ந்து கழகப் பேச்சாளர் வழக்குரை ஞர் .பூவை புலிகேசி பேசியதாவது: வரலாற்றில் எவ்வளவோ போராட்டம் நடைபெற்றுள்ளது. மனிதனை சக மனிதனாக மதிக்க வேண்டும் என்று மனித உரிமைப் போராட்டம் இந்தியாவில் தான் நடைபெற்றுள்ளது.அப்படி ஒரு போராட்டம் தான், வைக்கத்தில் நடைபெற்றது.
கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் கிராமத்தில் உள்ள கோவிலைச் சுற்றி உள்ள நடைபாதையில் நடக்கக் கூடாது என்று பார்ப்பனர்கள் நம்பூதிரிகள் தடுக்கிறார்கள், அதை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள் கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள். அவர்களைப் பிடித்து சிறையிலடைக்கிறார்கள், அந்தப் போராட்டம் தோற்றுப் போகிற நேரத்தில் தந்தை பெரியார் பங்கேற்று அப்போராட்டத்தை வெற்றி பெற வைக்கிறார். அதனால் தான். அவர் வைக்கம் வீரராகிறார். அந்தப் .போராட்டத்தை இனி யாரும் இருட்டடிப்புச் செய்ய முடியாத வரலாற்று ச் சாதனையாக . போராட்டம் நடைபெற்ற அந்த வீதியில் தந்தைபெரியார் நினைவகம், நூலகம் அமைத்து பெருமை படுத்தி இருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்கிறோம். திராவிட மாடல் அரசின் முதலமைச்சருக்கும், கேரள முதலமைச்சருக்கும். பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கின்றோம் என்று சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் எடமேலையூர்.பி. வீராச் சாமி, சவுந்தர்ராஜன், திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் ச.சாருக்கான் கழக இளைஞரணி மாவட்ட தலைவர் க.இராஜேஷ்கண்ணன், கழக இளைஞரணி நகர தலைவர் இரா.அய்யப்பன், கழகத் தோழர்கள் வடுவூர் உலகநாதன், உ.பிரபாகரன், ஆசையொளி மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். இறுதியில் நீடாமங்கலம் நகரச்செயலாளர் கி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.