அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய பாஜக அரசு விடுக்கும் அச்சுறுத்தல் தி.மு.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்தாது : திருச்சி சிவா பேட்டி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

புதுச்சேரி, ஜூலை 19  பா.ஜ.க-வின் அச்சுறுத்தலால் தி.மு.க. வுக்கு பின்னடைவு இல்லை என நாடாளுமன்ற உறுப்பி னர் திருச்சி  சிவா கூறியுள்ளார்.

வில்லியனூர் தொகுதி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற் றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக் கூட்டம் வில்லியனூர் மேலண்ட வீதியில் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்துக்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி என். சிவா செய்தியாளர் களிடம் கூறுகையில், “இந்தியா வில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த சில காலமாகவே அதிகார மய்யங் களை வைத்து பா.ஜ.க அச் சுறுத்தும் போக்கு நடைபெற்று வருகிறது. தற்போது தமிழ் நாட்டில் ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சோதனையின் காரண மாக எந்த வகையிலும் தி.மு.க.வுக்கு பின்னடைவு கிடையாது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பணி எளிதாகும். அதன் மூலம் தி.மு.க.விற்கு வெற்றி நிச்சய மாக கிடைக்கும். மக்கள் அனைத் தையும் உணர்ந்துள்ளனர். 

ஒன்றிய அரசு சோதனை செய்வதற்கான நோக்கங்களை யும், காரணங்களையும் தெரி விக்கவில்லை. இது குறித்து நாங்கள் எந்த வகையிலும் அச்சமடையவில்லை” என்று குறிப்பிட்டார். 

முன்னதாக, புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், “பா.ஜ.க பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து இந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தனர். அதில் குறிப்பாக மாநில தகுதி நிலை. அது குறித்து இதுவரை ஒரு படி கூட முன்னேறியது இல்லை. இன்றளவும் பொய் கூறி வரு கின்றனர். சட்டப்பேரவையில் தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப் பட்டு அரசு தீர்மானமாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் இதுவரை அந்த தீர்மானத்தை அனுப்பவில்லை. ஆளுநர் பதில் கூறுவதில்லை.

தமிழிசை  சவுந்தர்ராசன் ஆளுநர் என்பதில் இருந்து மாறி அரசியல்வாதியாக மாறிவிட்டார். புதுச்சேரியில் நடக் கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறேன். ஊழல் நடக்கவில்லை என கூறுங்கள் நாங்கள் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை தருகிறோம். மக்களுக்கு ஒவ் வாத திட்டங்களை புதுச்சேரி யில் செய்கின்றனர்” என்று குறிப்பிட்டார். இக்கூட்டத் தில் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி என். சிவா, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா ஆகியோர் கலை ஞர் நூற்றாண்டு விழா சிறப்புரை ஆற்றினர். இந்தக் கூட்டத்தில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் அனி பால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *