கம்பும் கத்தியும் சுழற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் 15.12.2024 அன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சர்க்கஸ் வித்தைக்காரன் போன்று வாள் சுழற்றியும் கம்பு சுத்தியும் காண்பித்தார்.
ஹிந்துக்களின் விழிப்புணர்விற்காக பாதுகாப்பிற்காக கத்தி-கம்பு பயன்பாடுத்துவது குறித்து தான் பரப்புரை செய்கிறேன் என்று கூறுகிறார் முதலமைச்சர் மோகன் யாதவ்.
இவர் முதலமைச்சர் ஆனதில் இருந்தே பொதுக்கூட்டங்களில் பெண்களுக்கு குழந்தைகளுக்கு கத்தி வழங்குவது, பள்ளி செல்லும் வயதில் உள்ள பிள்ளைகளுக்கு கம்பு கொடுத்து எப்படி சுழற்றுவது என்று தான் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருக்கிறாரே தவிர, வேறு உருப்படியான வளர்ச்சி பற்றிப் பேசுவதும் இல்லை – செய்வதும் இல்லை.
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலம் ஒரு ஹிந்துத்துவ மாதிரி மாநிலமாக மாறியுள்ளது
19.10.2024 அன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் வாளை வழங்கினார் முதலமைச்சர் மோகன் யாதவ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினராக இருந்த போது இவர் கம்பு சுற்றியது மற்றும் வாளைத்தூக்கிக்கொண்டு ஜெய் சிறீராம் என்று சொல்லிக் கொண்டு திரிந்த காலத்தை முதலமைச்சர் பதவியில் அமர்ந்த பிறகும் மறக்காமல் இருக்கிறார் போலும்!