7.1.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பஞ்சாப் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில்சிபில், அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவானது விவசாய சங்கங்களை சந்திக்க உள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பட்டினிப் போராட்டம் மேற்கொண்டுள்ள ஜக்ஜித் சிங் தலேவால் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தான் வகித்து வந்த கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகிக் கொண்டார்.
* கல்வியாளர்களை தவிர்த்து, தொழில்துறை மற்றும் பொதுத்துறை அதிகாரிகளை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்கக் ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்க, யு.ஜி.சி. பரிந்துரை
* அய்தராபாத்தில் உள்ள புதிய மேம்பாலத்திற்கு மன்மோகன் சிங் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் ரேவந்த் அறிவிப்பு.
* தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறியது, சிறுபிள்ளைத்தனமான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
தி இந்து:
* விரும்பத்தகாத செயலை ஆண்டுதோறும் செய்வதையே பழக்கமாகி விட்டார் ஆளுநர் என இந்து தலையங்கம் கண்டனம்.
* மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் முதலீடு செய்ய தனியார் துறை தயக்கம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
.- குடந்தை கருணா