தேர்தல் படுத்தும்பாடு
மகன்: அயோத்தி கோவிலில் ராமன் சிலையை ஜனவரி மாதம் நிறுவ முடிவு என்று செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா: அப்பாடி, தக்காளி விலை குறையும்!
ஆளுநருக்கு அவ்வளவு சக்தியா?
மகன்: தமிழ்நாட்டு கோவில்கள் சீரழிவு குறித்து ஆளு நரிடம் இந்து முன்னணி மனு கொடுக்க உள்ளதாமே, அப்பா!
அப்பா: கோவில், கடவுளைவிட, ஆளுநருக்கு அவ்வளவு சக்தியா? கடவுளிடம் முறையிட வேண்டியதுதானே, மகனே!