மணிப்பூர், ஜன.5- பாஜக முதலமைச்சர் பைரேன் சிங் புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மன்னிப்பு கோரினார். பைரேன் சிங் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் காங்போக்பி உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், 3.1.2025 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பைரேன் சிங் பேசுகையில், “மணிப்பூர் இனக் கலவரம் விடயத்தில் நான் மன் னிப்பு கோரியதை அர சியலாக்குபவர்கள், மணிப்பூரின் அமைதியை விரும்பாதவர்கள்” என பேசினார்.
மன்னிப்பு
இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், “மணிப்பூர் மாநிலம் அமைதியின்றி இருக்க வேண்டும் என்று நினைப்ப வர்களே நான் மன்னிப்புக் கோரியதை அரசியலாக்கி வருகின்றனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக்குரியவர் களை இழந்தவர்கள் ஆகியோரிடமே நான் மன்னிப்புக் கோரினேன்.
பயங்கரவாதிகளிடம் நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? “மணிப்பூர் பாஜக முதலமைச்சர் பைரேன் சிங் பயங்கரவாதிகள் எனக் கூறியது எங்களைத் தான்” என குக்கி பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதனால் காங்போக்பி மற்றும் மலைப்பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.