புதுடில்லி,ஜன.5- நாட்டில் குளிர்கால பருவநிலை ஆரம் பித்துள்ளது. தென் மாநிலங்க ளில் வழக்கம் போல மிதமாக உள்ள குளிர் வட மாநிலங்களில் பனிப் பொழிவாக வாட்டி வருகிறது.
ஹிமாச்சல், உத்தராகண்ட், அரியானா, டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் குளிர் இயல்புநிலையை பாதிக்கும் அளவிற்கு உள்ளது.
தலைநகர் டில்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் 3.1.2025 அன்று காலை சுமார் 100 விமானங்கள் புறப் படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல விமானங்களின் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் 3.1.2025 அன்று மதியம் முதல் விமான சேவை சீரானதாக செய்திகள் வெளியா கின. விமான பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களிடம் தங்களின் பயணம் குறித்துத் தெளிவு பெற டில்லி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.
12 மணிக்கு மேல் வாகனங் களை இயக்க முடியவில்லை வடமாநிலங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பனிமூட்டம் நிலவுவதால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்க ளை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடுமையாக திணறி வருகின்றனர்.
பனிமூட்டத்தால் அதிகாலை நேரங்களில் அதிகமாக விபத்து நிகழ்வதால் வாகன ஓட்டிகள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவதில்லை. இதனால் வடமாநிலங்களில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிச் காணப்படுகின்றன.