தந்தை பெரியார் 51ஆம் நினைவு நாளை முன்னிட்டு திருவொற்றியூர் மாவட்டம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் தலைமை வகித்தார். கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னெரசு பெரியார் சிறப்புரையாற்றினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000, ரூ.4000, ரூ.3000 மற்றும் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு 500 ரூபாயுடன் அனைவருக்கும் பெரியாருடைய புத்தகங்களும் வழங்கப்பட்டன. மாவட்டக் கழக தோழர்கள், தோழமை அமைப்பினர் கலந்து கொண்டனர்.