இடர்களைத் தடங்களாக்கி பயன் பெறுக! (2)

2 Min Read

தடைகளைத் தடங்களாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அக்களங்களை நாம் நமக்கான கொள்கை விளை நிலங்களாக்கிக் கொள்ளலாம்;
அதற்கென்ன வழிமுறை என்று கேட்கிறீர்களா? ஏராளம் உண்டு.
பதற்றமில்லாமல், அறிவுக்கு வேலை கொடுத்துத் துணிவுடன் எதிர் கொள்ளலாம்; முயற்சி நிச்சயம் திருவினையாக்கும்.
* எப்போதும் நடுநிலை உணர்வோடு அணுகுதல் (Objective)
* உணர்ச்சிகளை வெகுவாக அடக்கி நிதானமாகப் பிரச்சினையை ஆராய்தல் (விருப்பு – வெறுப்பற்ற தன்மையில்).
* அதனை ஒரு நல்ல கோணத்தில் பார்ப்பது மட்டும் போதாது,
* அந்த குறிப்பிட்ட சூழலில் எது அதிக நன்மை பயக்கும் என்று சிந்திப்பது.
* நம்முடைய நரம்புகளை நிதானப்படுத்தி வைத்துக் கொள்வது.
* மற்ற பல தொல்லைகளையும், சில தடுக்கும் சிறு காரணிகளையும் நன்கு புரிதல்.
* பிரச்சினைகளை சரியான பார்வையோடு அணுகி ஆராய்தல்
* ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சினையை மாற்றிக் காட்டுதல்
* எப்படி நிலைமையைக் கட்டுப்படுத்துவது என்பதில் முழுக் கவனத்தையும் செலுத்திக் காட்டுதல்.
– இப்படி அறிவிற்கு முழு வேலை கொடுத்து, நம்மை வளப்படுத்த இதை ஒரு வாய்த்த நல்ல சந்தர்ப்பமாகக் கொண்டு வரவேற்று நிதானம் இழக்காமல் எண்ணித் துணிந்த செயலில் இருந்து ஒரு போதும் பின்வாங்காத எஃகு உள்ள வைராக்கியங்கள்.

இவை ஒரு நீண்ட பயிற்சி மூலம் அமைய வேண்டிய திடசித்தங்கள் – செயல் நேரத்தில் அனைவருக்கும் இருக்கும் ஆற்றலை வெளிக் கொண்டு வர சதா பயிற்சிக்களமாகும் – வாழ்வில் ஏற்படும் அத்துணை துன்பங்கள், துயரங்கள், நட்டங்கள், கசப்பான நிகழ்வுகளைக் கண்டு மனந்தளராத உறுதி கொண்டு பயிற்சிப் பயிலரங்கங்களாக்கிக் கொண்டு நம்மை உயர்த்திட பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம்.

ஒரு போதும் நிதானத்தை இழக்காதீர்கள் – பதறாதீர் கவலைப்படுவதால் காதொடிந்த ஊசி அளவுகூடப் பயனில்லை.
எதுவும் ‘நன்மை, தீமை’ என்பது நம்முடைய பர்வையைப் பொறுத்ததே என்பதை ஒரு போதும் மறக்கவே கூடாது!
நம்முடைய ஒவ்வொரு தவறும் ஒவ்வொரு அனுபவம் என்பதைக் கற்றுப் பக்குவப்பட வேண்டிய பாடங்கள் ஆகும்.
எனவே நமது கண்ணோட்டத்தை சரியாகப் பார்க்கப் பழகி விடுங்கள்!

தியோடர் ரூஸ்வெல்ட் என்ற அறிஞர் அருமையாகக் கூறுகிறார்!
அம்மாதிரி (சோதனை) நேரங்களில் நமக்கு வேண்டியது வெறும் துணிச்சல் அல்ல நரம்பு மண்டலத்தினைக் கட்டுப்படுத்தும் கடினமானப் பயிற்சியே!
அமைதியான முறையில் பதற்றமின்றிய பக்குவமான அணுகுமுறையும் தான் தேவை என்பதை பல தடவைகளில் பயிற்சியாக்கித் தொல்லைகளை எதிர் கொண்டு முறியடிக்கப் பழகிட முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.
இப்படி பலப்பல நூல்களை ஆங்கிலம் அறிந்தவர் படித்துப் பயன் பெறுக.
தமிழாக்கமும் விரைவில் வரவும் கூடும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *