கருஞ்சட்டை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் நன்கு விளையாடிய நிதிஷ்குமாரின் (ரெட்டி) தந்தை தன்னை விட வயது குறைந்த சுனில் கவாஸ்கரை அய்தராபாத் விமான நிலையத்தில் சந்தித்தபோது, காலில் விழுந்து வணங்குகிறார்.
கிரிக்கெட்டிலும் ஜாதியா என்று கேட்கவேண்டாம்! கண்டிப்பாகக் கிரிக்கெட்டில் ஜாதி உண்டு. கிரிக்கெட் என்றாலே அது பார்ப்பனர்களின் கையிருப்பு – பணம் காய்க்கும் மரம்.
‘‘ஜீவா’’ என்ற திரைப்படம் இந்த அடிப்படையில் எடுக்கப்பட்டு, முதுகைத் தடவிப் பார்த்து (வேறு எதற்கு, பூணூல் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வ தற்குத்தான்) ஆட்டத்திற்கு ஆள் எடுத்தனர்.
இப்பொழுதுதான் கொஞ்சம் மாறி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் குழுத் தலைவராக (Captain) பார்ப்பனரல்லாதாரான கபில்தேவ் இருந்தபோதுதான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதேபோல, எம்.எஸ்.தோனி என்ற பார்ப்பனரல்லாதார் கேப்டனாக இருந்தபோதுதான் இரண்டாம் முறையாக உலகக் கோப்பையை வென்றது.
கவாஸ்கர் காலில் விழுந்தவர் – புதுமுகமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் இறங்கி, பாராட்டும் வகையில் சாதனை படைத்த – பார்ப்பன ரல்லாதாரான நிதிஷ்குமாரின் (ரெட்டி) தந்தையார்.
யார் இந்த கவாஸ்கர்?
பார்ப்பன ஊடகத்தால் தூக்கி நிறுத்தப்பட்டவர். ஒரு நாள் போட்டியில், அவர் ஆடிய கடைசி ஆட்டத்தில்தான் சதம் அடித்த திறமைசாலி!
பெங்களூருவில் 12.10.1987 அன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, சாய்பாபாவிடம் ஆசி பெறச் சென்றார் கவாஸ்கர். மோதிரம் ஒன்றைக் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார் சாய்பாபா! என்ன நடந்தது? அவர் எடுத்த ஓட்டம் வெறும் இரண்டே இரண்டு. சாய்பாபாவைத் தரிசிக்கச் செல்லாத கபில்தேவ் எடுத்த ஓட்டமோ 72.
இவர் காலில் யாரும் விழுந்ததில்லையே!
எதிலும் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பிரச்சினைதான்!