3.1.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நிபுணர் குழு பரிந்துரைப்படி நீட் தேர்வில் முழுமையான மாற்றத்தை அமலாக்குவோம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
* ஜனவரி 3 – சாவித்ரி பாய் புலே பிறந்த நாளை பெண்கள் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்க தெலங்கானா அரசு உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டில்லி பல்கலைக்கழக புதிய கல்லூரிக்கு சவார்க்கர் பெயருக்கு பதிலாக டாக்டர் மன்மோகன் சிங் பெயரிடப்பட வேண்டும்: பிரதமர் மோடிக்கு தேசிய மாணவர் அமைப்பு வேண்டுகோள்.
* பழங்கால இந்தியாவில் கீதையை ஆளுமையின் வழிகாட்டி வெளிச்சமாக வைத்திருப்பது வரலாற்று ரீதியாக தவறானது என்கிறார் மாநிலங்களவை உறுபபினர் ஜவஹர் சர்க்கார்.
* 30% தங்க கடன் திருப்பி செலுத்தப்படவில்லை; பெண்கள் தங்க தாலியை இழக்க பாஜக அரசே காரணம்: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு
* மோடி அரசாங்கம் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டது, பிரதமரின் புத்தாண்டு தீர்மானங்கள் வெறும் ‘ஜூம்லாஸ்’: மல்லிகார்ஜூன கார்கே
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை கூட நடத்த முடியாதா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி, 10 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
* பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து. நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப் பட்ட சிறைத் தண்டனை உறுதி: மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அரியானா மேனாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் பன்வாரிடம் 15 மணி நேரம் தொடர்ந்து விசாரணை; அமலாக்கத்துறையின் அத்துமீறிய, மனி தாபிமானம் அற்ற செயல்; அமலாக்கத்துறை கைது செய்ததை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
.- குடந்தை கருணா