ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே, தனது நாட்டில் இனி மரண தண்டனைகள் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. ஆனால், வளர்ந்த நாடான இந்தியாவில் இன்னும் மரண தண்டனைகள் தொடர்வது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை அரசாங்கமே வழங்குவது கொடுமையான விஷயம் எனவும் குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவதே சரியான நடைமுறை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.