மும்பை, ஜன.3 மோடி ஆட்சி வரும் 2026 வரை நீடிக்குமா என்பது சந்தேகம் என சஞ்சய் ராவ்த் தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. ஆயினும் கடந்த காலங்களில் இருந்ததை போல் பா.ஜ.க.விற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே ஒன்றியத்தில் பாஜக தற்போது கூட்டணி அரசு அமைத்துள்ளது.
சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 2026-ஆம் ஆண்டு வரை நீடிக்குமா என்பது சந்தேகம். மோடி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யமாட்டார், ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் அது மராட்டிய மாநிலம் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.