கருஞ்சட்டை
உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலகாபாத் சங்கமத்தில் கும்பமேளா முன்னேற்பாடுகளைப் பார்வையிடச் சென்றார். அப்போது அந்தக் கடுங்குளிரிலும் சில குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்த சாமியார் முதலமைச்சர் தனது பாதுகாப்பாளர்களிடமிருந்து சில்லறைகளை வாங்கி அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்குச் செல்லும் முன்பு தூத்துக்குடியில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசுகிறார். பணம் இல்லை என்று ஒரு மாணவி கூட படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று கருணை உள்ளத்தோடு தந்தையின் இடத்தில் இருந்து பேசினார்.
ஆனால், உத்தரப்பிரதேசத்திலோ சாமியார் முதலமைச்சர் பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்குப் பிச்சைக் காசு கொடுக்கிறார்.
தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் 1972 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது.
அத்திட்டத்தின் நோக்கம்:
* பிச்சை எடுப்பவர்களை மீட்டு அவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகளை அளிப்பது.
* பிச்சை எடுப்பதால் ஏற்படும் சமூக அவமானத்திலிருந்து அவர்களை மீட்பது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை மீட்டு மறுவாழ்வு மய்யங்களுக்கு அனுப்புதல்.
* மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, மன நல சிகிச்சை மற்றும் தொழில் பயிற்சி அளித்தல்.
* தகுதியானவர்களுக்கு சுயதொழில் தொடங்க உதவுதல்.
* உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் ஒப்படைத்தல்.
இந்தத் திட்டத்தை மேலும் மெருகூட்டி செயல்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான சமூக நலத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின்மூலம் பலர் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டனர்.
2023 ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரி்த்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன் அறிவிப்பின்றி செங்கற்பட்டு பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லத்திற்குத் திடீர் என்று அங்கே சென்று, நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘திராவிட மாடல்’ அரசுக்கும்,
‘பி.ஜே.பி. மாடல்’ அரசுக்கும் உள்ள வேறுபாட்டைப் பாரீர்!