விரதமிருந்து கோவிலுக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர்
பெரம்பலூர், ஜன.3 வேப்பந்தட்டை அருகே விரதமிருந்து கோவிலுக்குச் சென்ற வர்கள் பயணம் செய்த பேருந்து விபத்த்தில் சிக்கி ஒருவர் பலியானார்; 10 பேர் காயமடைந்தனர்.
வீட்டில் புகுந்த பேருந்து
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட் டையை அடுத்துள்ள நெய்குப்பை கிரா மத்தைச் சேர்ந்த 50-க் கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலுக்குப் புறப்பட்டனர். நெய்குப்பையில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பேருந்து அரை கிலோ மீட்டர் தூரம் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த ஓட்டு வீட்டினுள் புகுந்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
உயிரிழப்பு
இந்த விபத்தில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த சன்னாசி மனைவி லட்சுமி (வயது 40) என்பவர் இடி பாடுகளுக்குள் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். அருகில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் சன்னாசி, மகன் முத்து, மகள் தேன்மொழி ஆகி யோர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சுற்றுலா பேருந்து வீட்டின் சுவரில் மோது வதற்கு முன்பாக அருகில் நின்று கொண்டிருந்த சிறிய பேருந்து மீது மோதி விட்டு பின்னர் வீட்டுக்குள் புகுந்தது. அப்போது பேருந்தில் பயணம் செய்த மேல்மரு வத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை அரு கில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து வி.களத்தூர் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு சென்றபேருந்து விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.