சென்னை, ஜன.2 சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறிய தாவது:
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
நாங்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே பொதுசிவில் சட்டம் தேவையற்றது என்று ஆர்ப்பாட்டம் செய்தோம் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் குழப்பம் ஏற்படும். நடந்து முடித்த நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று பிரதமர் மோடி கூறிவந்தார் ஆனால் அவர்களுக்கு 240 இடங்கள் தான் கிடைத்தது ஆனால், தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. எதிர் காலத்தில் பிரதமர் மோடிக்கு 250 இடங்கள் கூடகிடைக்காது இதே தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத்தோதலில் திமுக தலைமையிலான கூட்டணி 200க்கும் அதிமான இடங்களில் வெற்றிபெறும்
திமுக கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். கூட்டணியில் எந்த விரிசலும் இல்ல. பிப்ரவரி மாதம் மண்டலம் வாரியாக இன்னும் வலுப்படுத்தி வெற்றி பெற செய்வோம். விஜய்யின் வருகையால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை கூடங்குளத்தில் இன்னும் 2 அணு உலைகளைக கொண்டுவருவோம் என்று பிரதமர் மோடி சொல்கிறார். அப்படிக் கொண்டுவந்தால் அது பெரிய ஆபத்தாகி விடும். தமிழ்நாட்டை பாஜக குறி வைத்து தாக்குகிறது. அண்ணாபல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்வு கொடூரமானது. அந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்கவிடமாட்டேன் தமிழ்நாட்டில் பாஜன தாவை வரவிடமாட்டேன் முதலமைச்சர் மு.கஸ்டாலின் மிகவும் சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகிறார். இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்கும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது. மம்தாவிற்கு இல்லை ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.