சவாய் மாதேபூர், ஜன.2 பாதிக்கப்பட்டவருக் கும், குற்றஞ்சாட்டப் பட்டவருக்கும் ஏற்பட்ட சமரசம் காரணமாக பாலியல் துன்புறுத்தல் வழக்கை கைவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதேபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஆசிரியர் ஒருவர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. எனினும் அந்தச் சிறுமியின் குடும்பத்தினருக்கும் ஆசிரியருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால், அவர் கைது செய்யப்பட வில்லை.
இதைத் தொடர்ந்து, தன் மீது காவல் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி மாநில உயர்நீதிமன்றத்தில் அந்த ஆசிரியர் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று அவர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
பொது நல மனு
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத் தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜிலால் பைரவா என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவி குமார், சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு உயர்நிலைப்பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆசிரியரே அந்தச் செயலில் ஈடுபட்டுள்ள நிலையில், இது போன்ற குற்றங்கள் சமூகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறிவிட முடியாது.
இத்தகைய நிகழ்வுகளில் வழக்கை ரத்து செய்வதன் மூலம் விசாரணையைக் கைவிடு வதற்கு பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப் பட்டவருக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டது என்பது காரணமாக இருக்க முடியாது. போக்சோ சட்டத்தின் 7ஆவது பிரிவின் கீழ்,குற்றம் சாட்டப்பட்டவரின் (ஆசிரியர்) செயல் குற்ற மாகும். இந்தக் குற்றத்துக்கு அபாரதத் துடன் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
இந்தத் தண்டனையும் அபராதமும் குழந்தை களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களை தனிப்பட்ட நபர் சார்ந்தது என்று எளிதாக எடுத்துக் கொள்ளாமல், சமூகத்துக்கு எதிரானவை என்றே கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான காவல் துறை வழக்கை ரத்து செய்து அந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.