தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விதிவிலக்கு
புதுடில்லி, ஜன. 2- நாடு முழுவதும் கடந்த 2023-2024 ஆம் கல்வி ஆண் டில் வட்சம் மாணவ- மாணவிகள் பள்ளிகளில் இருந்து இடை யில் நின்றி ருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி குறித்த தர வுகளை சேகரிக்க கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் என்ற தளத்தை ஒன்றிய கல்வி அமைச்சகம் பராமரித்து வருகிறது இந்த தளம் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை கல்வி அமைச்சரகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 2023-2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பள்ளிகளில் இருந்து அதிகமான மாணவர்கள் இடை நின்றிருப்பது தெரிய வந்ததுள்ளது
பாஜக ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் மோசம்
அந்த வகையில் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளி களில் மாணவர் எண்ணிக்கை 25.17 கோடியாக இருந்தது இது 2023-2024 ஆம் ஆண்டில் 24.80 கோடியாக சரிந்துள்ளது இதன் மூலம் ஆம் ஆண்டில் இதன் மூலம் 37 லட்சம் மாணவ-மாணவிகள் இடை நிற்றல் ஆகி உள்ளனர். இதில் மாணவர்கள் 21 இலட்ச மாகவும், மாணவிகள் 16 லட்ச மாகவும் உள்ளனர் மேலும் மாநிலங்களில் பள்ளிகளின் எண்ணிக்கை, மற்றும் ஆசிரியர்களின் விவரங்களையும் வெளி யிட்டுள்ளது.
அதன்படி உத்தரப்பிர தேசம், மத்தியப் பிரதேசம் அசாம், ஒடிசா, ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், உத்தராகண்ட் மற்றும் ராஜஸ்தான் மாணவர்கள் சேர்க்கை சதவீதத்தை விட பள்ளிகளின் சதவீதம் அதிகமாக உள்ளது இது பள்ளிகளை குறைவாகப் பயன்படுத்துவதைக் கட்டுகிறது அதே நேரம் தமிழ்நாடு தெலங்கானா பஞ்சாப் மேற்குவங்கம், அரியானா, குஜராத், டில்லி, மற்றும் பீகாரில் பள்ளிகளின் விகிதத்தை விட மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது இது உட்கட்டமைப்பு சிறப்பாக பயன்படுத்துவதைக் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.