சமூகவலைதளங்களில் கிண்டலும், கேலியும்
புதுடில்லி, ஜன.1 டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழ் பெற பிரதமர் மோடி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்கா அனுப்பியிருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிச.24-29 வரை அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஜெய்சங்கர், அந்நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த பயணம் குறித்து சமூகவலைதளத்தில் பலர் நையாண்டி செய்து வருகின்றன்ர் அதில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை அமரிக்காவுக்கு அனுப்பி, தனக்கு, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழைப் பெற்று வருமாறும், இல்லாவிட்டால் உங்கள் வேலை பறிபோகும் என்று கூறியிருப்பதாகவும் நையாண்டி செய்து வருகின்றனர். அதிலும் மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பு என்று கூறி வெள்ளை மாளிகை முன்பு சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்துவது போன்ற படங்களை பதிவிட்டு வருகின்றனர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறார்.
சீன அதிபர், உள்ளிட்ட பல கம்யூனிச நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தை மினி பாகிஸ்தான் என்று கூறுவதா?
மகாராட்டிரா அமைச்சருக்கு பினராயி விஜயன் கண்டனம்
திருவனந்தபுரம், ஜன.1 கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறிய மகாராட்டிர அமைச்சர் நிதிஷ் ராணேவுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியதாவது: மகாராட்டிர மாநில அமைச்சர் நிதிஷ் ரானே, கேரளாவை மினி பாகிஸ்தான் என அழைத்திருப்பது மிகவும் தீங்கிழைக்கக் கூடியது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்தின் கோட்டையாக விளங்கும் கேரளாவுக்கு எதிராக சங் பரிவாரத்தால் நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரங்களை இதுபோன்ற சொல்லாட்சிகள் பிரதிபலிக்கின்றன.
கேரளா மீதான இந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும், சங் பரிவாரின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.