1.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் வன்முறை தலைநகராக இருக்கிறது, ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உச்சநீதிமன்றம் நியமித்த குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கங்கள் முடிவு.
* பாஜக அரசுகளின் மனுஸ்மிருதி ஆட்சியில் ஏழைகள் தலித் மக்கள் துயரப்படுகின்றனர்: மல்லிகார்ஜூன கார்கே சாடல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கோவில்களுக்குள் நுழையும் முன் மேல் ஆடையை அகற்றும் ஆண்களின் வழக்கம் தீமை, மாற வேண்டிய நேரம், என்கிறார் சமூக சீர்திருத்தவாதி சிறீநாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்தின் தலைவர் சுவாமி சச்சிதானந்தா. இது சமூக புரட்சியாக மாறும், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரவு.
* மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் பிரேன் சிங். பிரதமர் மோடி எப்போது வருத்தம் தெரிவிப்பார் என காங்கிரஸ் கேள்வி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
*அதானி குழுமத்துடன் விலை நிர்ணயம் சிக்கல்களை காரணம் காட்டி ஸ்மார்ட் மீட்டர் டெண்டர்களை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் லிமிடெட் (TNPDCL), ரத்து செய்தது
தி டெலிகிராப்:
* பாதி நேரம் படிப்பு; மீதி நேரம் தொழிற் பயிற்சி, திறன் திட்டம் என்ற யு.ஜி.சி. பரிந்துரைக்கு, ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு. மாணவர்களின் கல்வித் திறனை பாதிக்கும் என அச்சம்.
.- குடந்தை கருணா