தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், “வெற்றி முழக்கம்” தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் விவரம் வருமாறு:
மேட்டூர்
26-12-2024 அன்று மேட்டூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு நாள் மற்றும் வைக்கம் நூற்றாண்டு நிறைவு வெற்றி விழா, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன், சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன், மாவட்ட தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட செயலாளர் ப.கலைவாணன்,
தலைமை கழக அமைப்பாளர்கள் கா.நா பாலு, ஆத்தூர் சுரேஷ், மேட்டூர் நகர தலைவர் கலையரசன், நகர செயலாளர் நேரு, துணை செயலா ளர் சீனிவாசன், மேட்டூர் குமார், சோமசுந்தரம், ஜெயக்குமார், ஆனந்தன், இராதாகிருஷ்ணன், வெள்ளார் இரா சேந்திரன், மாதேஸ்வரன், அண்ணாதுரை, ஓமலூர் சவுந்தரராசன், முத்து மற்றும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு பொதுக் கூட்ட நிகழ்வை சிறப்பித்தனர்.
முன்னதாக கழகத்தின் தோழர்கள் சிறப்பாக கடை வசூல் மூலம் கூட்டத்தின் பிரச்சார முறையாக மேட்டூர் நகர பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு சென்றனர்.
கோவை
கோவையில் திராவிடர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ் நாடு, கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் பொதுக்கூட்டம் – கோவை சுந்தரா புரம் சங்கம் வீதியில் தோழர்கள்: ச.சிற்றரசு – சா.சித்ரவேல் – நினைவு மேடையில் கோவை மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் 26.12.2024 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன் வரவேற்புரை வழங்கினார். தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் உரையாற்றினார். த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருஷ்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ரவி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக பகுதி செயலாளர்கள் கார்த்திக்கேயன், எஸ்.ஏ.காதர், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் காளீஸ்வரன்
தி இ த பே பொதுச்செயலாளர் கா.சு.நாகராஜ் மற்றும் விசிக, சி.பி.அய் மற்றும் சி.பி.எம், மதிமுக உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் திராவிடர் கழக கோபி, நீல மலை, மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, தாராபுரம் உள்ளிட்ட கழக மாவட்ட தலைவர், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
விடுதலை வாசகர் வட்டம் கு.வெ.கி.செந்தில், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இரா.வெங்கடாசலம், மாவட்ட ப க தலைவர் பெ.சின்னசாமி, செயலாளர் அ.அக்ரிநாகராஜ், ப க சூசைராஜ், மாநகர தி க அமைப்பாளர் யாழ் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் செ.மதியரசு செயலாளர் சா.ராசா, திருமண நிலைய அமைப்பாளர் வ.ராஜேஸ்வரி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் த.கவிதா, வழக்குரைஞர் ச.பவதாரிணி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் பெ.நதியா, அ.மு.ராஜா, மாவட்ட மாணவர் கழக செயலாளர் ஞா.தமிழ்செல்வன்
அமைப்பாளர் க.கவுதமன், தலைவர் த.க.கவுதமன், ஒன்றிய தலைவர் எட்டி மடை மருதமுத்து, ந.புரட்சித்தமிழன், பகுதி கழக பொறுப்பாளர்கள் சுந்தராபுரம் பகுதி செயலாளர் ஜெயக்குமார், வடவள்ளி பகுதி கழக தலைவர் ஆட்டேசக்தி,கணபதி பகுதி கழக தலைவர் கவி.கிருஷ்னண், செயலாளர் திராவிடமணி, பீளமேடு பகுதி கழக தலைவர் இரமேஷ், செயலாளர், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்த் மற்றும் கழக தோழர்கள் முத்துமாலையப்பன், இரா.சி.பிரபாகரன், மே.பா.ரங்கசாமி, வேலாண்டிபாளையம் பிரபு, சேரன்நகர் ஆனந்த், அர்ஜூனன், நியூட்டன், பெரியார் மணி, தி.க ஆனந்த், ஆ. அருண், நா. குரு, ஆவின் சுப்பையா, செல்வகுமார், இருதயராஜ், பொன்ராஜ், இலைக்கடை செல்வம், வெற்றிச்செல்வன், முத்துகணேசன், தி.க ஆறுச்சாமி, சுந்தர்ராஜ், கோபாலகிருஷ்ணன், சா.சிவக்குமார், பிரபாகரன், அஜித், சூலூர் கந்தசாமி, குறிச்சி ராமமூர்த்தி,சி.கனகராஜ், தமிழரசன், சக்தி, விஜயன், ஆகாஷ், பெரியார் செல்வம், தீனா மூர்த்தி, ராஜா, மு.தமிழ்,செ.கார்த்திக்,மு.தரணி,வெ.யாழினி, வெ.இளமதி, மகேஸ்வரி, ஜோதிமணி, கல்பனா, கயல்விழி, சகாயமேரி, தருமபுரி ராமசாமி, செ . தனலட்சுமி, பாக்கியா, பு. சுமதி, சித்ரா, சந்திரகலா, தி.ச. கார்முகிலி, தி.ச. யாழினி, திராவிட எழில், செ. கவுசல்யா, த.க. யாழினி, கணபதி தேவி, ஒக்கிலிபாளையம் பாக்கியம் உள்ளிட்ட தோழர்களுடன் ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் முன்னதாக கோவை நிமிர்வு கலைக் குழுவினர் பறை இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிறைவாக சுந்தரா புரம் பகுதி கழக தலைவர் தெ.குமரேசன் நன்றி உரையாற்றினார்.
சங்கராபுரம்
சங்கராபுரம் பேருந்து நிலையம், சுயமரியாதைச் சுடரொளிகள் மு.கலைச்செழியன், மா.கோதண்டம் நினைவு மேடையில் 25.12.2024 புதன்கிழமை வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா, வெற்றி முழக்கப் பொதுக்கூட்டமாக எழுச்சியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக காப்பாளர் முனைவர் ம. சுப்பராயன் தலைமை வகித்தார்.சங்கராபுரம் ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் மா.ஏழுமலை வரவேற்புரையாற்றினார்.
சங்கராபுரம் ஒன்றியப் பெருந்தலைவர் திலகவதி நாகராஜன்,மாவட்ட கழகச் செயலாளர் ச. சுந்தரராசன்; துணைத் தலைவர் குழ. செல்வராசு, மாவட்ட கழக இலக்கிய அணித் தலைவர் புலவர் பெ.சயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் யாழ் திலீபன் எழுச்சி உரையாற்றினார்.
இந்த வைக்கம் போராட்டம், வெற்றி பெற்று நூறு ஆண்டு நிறைவு பெற்றதன் வெற்றி விழாவை, கேரள அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கடந்த 12.12.2024ஆம் தேதி வைக்கத்தில் கொண்டாடினார்கள்.தமிழ்நாடு அரசால் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியாரின் நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட பெரியாரின் சிலை,புதிதாக வடிவமைக்கப்பட்ட நூலகம் ஆகியவற்றை இரு மாநில முதலமைச்சர்களும் திறந்து வைத்து விழா ஏற்பாடு செய்து, பெரியாரைப் போற்றினார்கள். திராவிடர் கழகத் தலைவர்-தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விழாவில் கலந்துகொண்டு, பெரியாரின் மானம் பாராத உரிமை மீட்பு தொண்டைப் போற்றி விழா எடுத்தமைக்காக, இரு மாநில முதலமைச்சர்களுக்கும் நன்றி கூறி பாராட்டினார்கள். இவ்விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுற்றார்கள்.
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு வெற்றி விழாவை தமிழ்நாடு முழுவதும் 100 கூட்டங்கள் நடத்தி மக்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யுமாறு தமிழர் தலைவர் அறிவுறுத்தியதின் பேரில், இக்கூட்டம்,இன்று சங்கராபுரத்தில் நடைபெறுகிறது. நாம் அனைவரும் பகுத்தறிவைப் பயன்படுத்தி வளமாக வாழ்வோம் எனக் கூறி தனது உரையை முடித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன்,மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.முருகன், ரிஷி வந்தியம் ஒன்றிய கழகத் தலைவர் அர. சண்முகம், கல்லை நகர செயலாளர் நா.பெரியார், ஜம்பை கிராமம் கிளைக் கழகத் தலைவர்
வை. சந்திரசேகர், மூரார்பாளையம் கிளைக் கழகத் தலைவர் இரா. செல்வமணி, கடுவனூர் கிளைக் கழகத் தலைவர் கி. ஆனந்தன், அரியலூர் கிராம கழக மகளிரணி அமைப்பாளர் சத்யா கோதண்டபாணி, ஊராங்கனி கழக மகளிரணி அமைப்பாளர் ஜெயலட்சுமி ஏழுமலை, சங்கராபுரம் கழக மகளிரணி அமைப்பாளர் அன்புமணி சுப்பராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வெ. சவுந்தரராஜனின் மந்திரமா, தந்திரமா என்ற அறிவியல் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக கல்லை நகர கழக தலைவர் இராம முத்துசாமி நன்றி கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட கழக தோழர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரியில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர், கேரளா முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மாபெரும் பாராட்டு விழா பொதுக்கூட்டம் சாரம் அவ்வைத்திடலில் 26.12.2024 மாலை நடைபெற்றது.
கூட்டத் தொடக்கத்தில் கழகத் தொழிலாளரணிச் செயலாளர் கே.குமார் மந்திரமா ? தந்திரமா ? என்ற அறிவியல் நிகழ்ச்சியை நடத்தினார். எதுவும் மந்திரம் இல்லை, தந்திரமே என்கின்ற செயல் விளக்கத்துடன் இடையிடையே கொள்கைப் பாடல்களையும் பாடி நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்தார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் மு. குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
திராவிடர் கழக இளைஞரணி தலைவர் தி.இராசா, உழவர்கரை நகராட்சித் தலைவர் சு.துளசிராமன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு தமிழ்ச்செல்வன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி புதுச்சேரி மாநிலப் பொதுச் செயலாளர் ஜிகினி. முகமது அலி, மறுமலர்ச்சி தி.மு.க பொறுப்பாளர் மா.இளங்கோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் சு.இராமச்சந்திரன், மனித நேய மக்கள் கட்சி தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை. செய்யது, தி.மு.க மாநில அமைப்பாளரும், சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா, திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வைக்கம் போராட்ட வரலாறு அதில் ஈடுபட்ட தலைவர்கள் குறிப்பாக தந்தை பெரியார் சிறையில் அனுபவித்த கொடுமைகள், பெரியார் சிறையில் இருக்கின்ற நிலையில் அவருடைய துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமையேற்று வழிநடத்திய வரலாறுகளையும், திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முன்னதாகவே பெரியார் இதனைப் போன்ற கிளர்ச்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பொழுதே நடத்திய செய்திகளை எல்லாம் குறிப்பிட்டு, காந்தியார் அவர்களே இந்த போராட்டத்தில் பெரியார் தலையிட வேண்டாம் என்று சொல்லிய வரலாறுகளையும், இதில் ராஜகோபாலாச்சாரியின் உள்ளறுப் பற்றியத் தொடர்புகளையும் விளக்கி ஒருமணி நேரம் சிறப்பான உரை நிகழ்த்தினார்.
இறுதியாக கழக இளைஞரணித் தோழர் சபீர் முகமது நன்றி கூறினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு.இரஞ்சித் குமார், பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், நகராட்சி, கொம்யூன் கழகப் பொறுப்பாளர்கள் எஸ். கிருஷ்ணசாமி, மு.ஆறுமுகம், தெ.தமிழ்நிலவன், கா.ந.முத்துவேல், விடுதலை வாசகர் வட்டச் செயலா ளர் ஆ.சிவராசன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா. சத்ய ராஜ், ஊடகவியலாளர் பெ. ஆதிநாரா யணன், துளசி.கல்பனா, குப்புசாமி, இளைஞரணிச் செயலாளர் ச.சித் தார்த், துணைத் தலைவர் பிரபஞ்சன், பி.அறிவுச்செல்வன், வா.சு. பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக அமைப்பு தோழர்கள் தீனா, கோ.கலியபெருமாள், திருக்குறள் சண்முகம், மனித் கோவிந்தராஜ், வீர.மோகன், இரா.இளங்கோ, பொன். செல்வராஜ், இரா. சந்திரபோஸ் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
புதுச்சேரி சாரம் பகுதி முழுவதும் கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறந்தது காண்போரை வியப்படைய செய்தது. அதற்கு காரணமாக இருந்த தோழர்கள் ஆ.சிவராசன், மு. ஆறுமுகம், மு.குப்புசாமி, பெ.ஆதிநாராயணன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.