இலங்கையில் பள்ளி வேலை நாள்கள் 210 லிருந்து 181 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட அட்டவணை அங்குள்ள அரசு, தனியார் பள்ளிகள், புத்த துறவி மடாலயங்களுக்கும் பொருந்தும் என அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.