இம்பால், ஜன. 1 மணிப்பூரில் இரு சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோத லுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மாநில முதலமைச்சர் பிரேன் சிங் நேற்று (31.12.2024) தெரி வித்தார்.
அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஒருவரையொருவா் மன்னித்தும், கடந்த கால தவறுகளை மறந்தும் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் அவா் வலி யுறுத்தினாா்.
மோதல்
மணிப்பூரில் பெரும்பான்மை யினராக உள்ள மைதேயி சமூகத்தி னருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி-ஜோ சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா்.
இதையடுத்து, அந்த மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கும் இடையே தொடா்ந்து ஏற்பட்ட மோதலால், இன்றளவும் அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை.
செய்தியாளர்களிடம்…
இந்நிலையில், மாநிலத் தலைநகா் இம்பாலில் முதலமைச்சர் பிரேன் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 20 மாதங்களில் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் குறைந்துள்ளன.கடந்த ஆண்டு மே முதல் அக்டோபா் வரை, மாநிலத்தில் 408 துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த எண்ணிக்கை நிகழாண்டு மே முதல் தற்போது வரை 112 ஆக குறைந்துள்ளது.
மன்னிப்பு
காவல் நிலையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் 3,112 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேபோல 2,511 வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வன்முறை தொடா்பாக இதுவரை 625 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 12,047 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மாநிலத்தில் இரு சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து சமூகத்தினரும் ஒருவரையொருவா் மன்னித்து, கடந்த கால தவறுகளை மறக்க வேண்டும்.
‘புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும்’
கடந்த 3, 4 மாதங்களாக மாநிலத்தில் சற்று அமைதி நிலவுகிறது. இதன்மூலம், புத்தாண்டில் மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அமைதியான, வளமை யான மணிப்பூரில் ஒன்றிணைந்து வாழ்வதன் மூலம், அனைவரும் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றாா் அவர் கூறினார்.