தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் பரப்புரைக் கூட்டங்கள்

Viduthalai
4 Min Read

தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், “வெற்றி முழக்கம்” தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் விவரம் வருமாறு:

செய்யாறு
செய்யாறு நகரின் ஆரணி கூட்டுச் சாலையில் செய்யாறு, டிச. 30- 25.12.2024 புதன்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் வைக்கம் வெற்றி முழக்கக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு, கேரள முதலமைச்சர் களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ. இளங்கோவன் தலைமையில் நடை பெற்றது. அவர் தம் தலைமை உரையில், கூட்டத்தின் நோக்கம் குறித்து தெளிவாக உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகத் தோழர் சின்னதுரை, பகுத்தறிவாளர் கழகத் தோழர் சுதா வாசுதேவன், தலைமை கழக அமைப்பாளர் அரக்கோணம் பு.எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச்செயலாளரும் கழகச் சொற்பொழிவாளருமான அண்ணா. சரவணன் அறிமுக உரையாற்றினார். அவர் தம் உரையில், வைக்கம் போராட்டத்தினுடைய தொடக்கம், தந்தை பெரியாரின் பிரச்சாரத்தால் போராட்டத்தில் ஏற்பட்ட பெருஎழுச்சி, வைக்கம் போராட்டத்தின் வெற்றி, வைக்கம் போராட்டமே இந்தியாவின் முதல் மனித உரிமை போராட்டம் என்பதையும் அம்பேத்கரின் மகத்துக்குளப் போராட்டத்திற்கு உந்துதலாக இருந்த தன்மை குறித்தும் அம்பேத்கரை இழிவு படுத்தும் பாரதிய ஜனதா கட்சியையும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் உரையாற்றினார்.

சிறப்புரையாற்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளரும் கழகச் சொற்பொழிவாளருமான முனைவர் காஞ்சி பா. கதிரவன் தம் உரையில், வைக்கம் போராட்ட நூற்றாண்டில், வைக்கத்தில், அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி முன் னிலையில், தமிழ் நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திறந்து உரையாற்றிய செய்திகள் குறித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் பங்கேற்றதையும் தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள், இரு மாநில அமைச்சர் பெருமக்கள், இரு மாநில தலைமைச் செயலாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் வைக்கம் போராட்டத்திற்கு காந்தியாரும், ராஜாஜியும் செய்த செயல்கள் குறித்தும் அம்பேத்கரை இழிவு படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்குக் கண்டனம் தெரிவித்தும் இளையராஜாவை இழிவுபடுத்திய ஸநாதன வாதிகள் குறித்தும் இளையராஜாவுக்கு திராவிடர் கழகம் செய்திருக்கின்ற பெருமை குறித்தும் திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் குறிப்பிட்டு, இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் முனைப்புடன் செயலாற்றக்கூடிய தன்மையையும் ‘பெரியார்திடல் காட்டும் பாதையில் எங்கள் பயணம் செல்லும்’ என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கின்ற தன்மையையும் விவரித்து உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வடமணப்பாக்கம் வெங்கட் ராமன் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். தங்கம் கே. பெருமாள் நன்றியுரை ஆற்றினார்.
செய்யாறு கழக மாவட்டச் செயலா ளர் பொன். சுந்தர், மேனாள் மாவட்டச் செயலாளர் சேத்துப்பட்டு அ. நாகராசன், இராணிப்பேட்டை மாவட்ட கழகத் தலைவர் சு. லோகநாதன், செய்யாறு கழக மாவட்ட மாணவர் கழகத் தோழர்கள் க. சிவகுமார், ஆகாஷ், நரேஷ், விஜய், க. வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் என். வி.கோவிந்தன், வாசுதேவன், திராவிடர் கழகத் தோழர்கள் மு. வெங்கடேசன், என். கஜபதி, என். சீனிவாசன், பி.ஏ. உமாபதி, இளைஞரணித் தொழர்கள் வெ. மனோஜ் குமார், செ. அரவிந்த், அ. இளவரசன், காஞ்சிபுரம் தோழர் ரவிபாரதி, திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரி, எல்அய்சி பாண்டியன் உள்ளிட்ட தோழர்களும் ஏராளமான பொதுமக்களும் கூட்டத்தில் உரையாற்றியவர்களின் கருத்துகளைக் கேட்டு பாராட்டினர்.
செய்யாறு பகுதியில் வைக்கம் வெற்றி முழக்கக் கூட்டம் ஒரு புத்தெழுச்சியைத் தந்தது.

திருப்பத்தூர்
27.12.2024 அன்று மாலை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாபட்டு வைக்கம் வீரர் படிப்பகம் அருகில் தந்தை பெரியார் 51 ஆம் நினைவு நாள், வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ் நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி, திராவிட மாடல் அரசின் சாதனைகள் திராவிடர் கழக தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா. புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் திருக்கோட்டியூர் ஜெ. தனபாலன் தொடக்க உரை ஆற்றினார்.திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் கவிஞர் தங்கராசு, தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழ்வாணன், சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வைகை பிரபாகரன், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோவிந்தராஜ், திருப்பத்தூர் தி மு க
நகர் கழகச் செயலாளர் ரெ. கார்த்தி கேயன், திமுக சிறுபான்மை அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எஸ்.சாக்லா, பேரூராட்சி மன்றத் தலைவர் கோகிலா நாராயணன், நாராயணன், திமுக மகளிரணி நகரத் துணைச் செயலா ளர் ஈஸ்வரி, நகர் அவைத் தலைவர் ராம.இரவி, தென்மாபட்டு வைக்கம் வீரர் படிப்பகத்தின் தலைவர் முத்து வயிறு, துணைத் தலைவர் சித்த ரஞ்சன், செயலாளர் குறிஞ்சி செழியன், திமுக வார்டு செயலாளர் அந்தோணிராஜ், வார்டு செயலாளர் மதியழகன்,
16ஆவது வார்டு உறுப்பினர் சுலை மான், 17ஆவது வார்டு உறுப்பினர் திருஞானசம்பந்தம், 18ஆவது வார்டு உறுப்பினர் பாண்டியன், திமுக மகளிரணி ஆறுமுகத்தம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு உரை ஆற்றினர்.
இறுதியாக கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர்.பா.மணியம்மை, தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்டம் பற்றியும், திராவிட மாடல் அரசின் சாத னைகள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். தென்மாபட்டு பகுதி பொதுமக்கள், அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட்டத்தில் பேசப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் தொண்டறத்தை பற்றி அறிந்து மகிழ்ச்சியுடன் பாராட்டிச் சென்றார்கள். இறுதியில் பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் க.வீ. செயராமன் நன்றி உரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *