“வைக்கம் முழக்கம்” – திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் பொதுக்கூட்டம்
உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், சே.மெ.மதிவதனி பங்கேற்பு
ஒரத்தநாடு, டிச. 29- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் 22.12.2024 ஞாயிறு மாலை 6மணியளவில் ஒரத்தநாடு பேருந்து நிலையம், பெரியார் படிப்பகம் அருகில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் விழா ”வைக்கம் வெற்றி முழக்கம்” தமிழ்நாடு, கேரள அரசு முதலமைச்சர்களுக்கு நன்றி திராவிடர் மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
கூட்டத் தொடக்கத்தில் மாலை 5.30 மணி முதல் 6.45 வரை திராவிடர் கழக கலைத்துறை வழங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கலைக்குழுவினர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன், ஆசிரியர் கோபு.பழனிவேல் பாவலர் பொன்னரசு, டாக்டர் உறந்தை கோபு ஆகியோர் இணைந்து இன எழுச்சி இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
சரியாக மாலை 6.45 மணிக்கு பொதுக் கூட்டம் தொடங்கியது. ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் அ.சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் மாவட்ட இணைச் செயலாளர் தீ.வ.ஞானசிகாமணி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர் இரா.துரைராசு, ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் இரா.சுப்ரமணியன் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கோ.இராமமூர்த்தி நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன், வடக்கு ஒன்றிய தொழிலாளரணி தலைவர் ரெ.சசிக்குமார், வடக்கு ஒன்றிய இளைஞரணித் தலைவர் நா.அன்பரசு, நகர இளைஞரணி செயலாளர் மா.சாக்ரட்டீஸ்ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்.
தொடர்ந்து தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் செ.தமிழ்செவ்லன் பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், குடந்தை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், மாநில ப.க அமைப்பாளர் சி.இரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் சக்ரவர்த்தி, மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் சாமி.மனோகரன், ம.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் வீ.சாமிநாதன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் டி.ஆர்.சுரேஷ், ஒன்றியகுழு தலைவர் பார்வதி சிவசங்கர், தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல.இரமேஸ்குமார், தி.முக. தெற்கு ஒன்றிய செயலாளர் மா.முருகையன், தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் மு.செல்வராசு, தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், தி.முக. மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மனவழகன் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் திராவிட.கதிரவன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியம், திராவிடர் கழக காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் சி.அமர்சிங், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் கு.நேரு அகியோர் கருத்துரையாற்றினார்கள்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார், சட்டக் கல்லூரி திரவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்கள்.
மரக்கன்று வழங்குதல்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் மகிழ்வாக ஆசிரியர் பெரிதும் வலியுறுத்தும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கோடு மாவட்ட இளைஞரணி தலைவர் கருவிழிக்காடு ரெ.சுப்ரமணியனின் காவராப்பட்டில் இயங்கும் முல்லை ஆக்ரோ சர்வீஸ் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
சே.மெ.மதிவதனி சிறப்புரை
இறுதியாக திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் தந்தை பெரியாரை பார்க்காத என்னை போன்றவர்களுக்கு தந்தை பெரியாரை அவர் கொள்கைகளைக் கடத்தியவர் இன்று 29 வயது இளைஞரைபோன்று செயலாற்றும் 92-ஆவது பிறந்தநாள் காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் 100 வயதையும் கடந்து நம்மையும் நாட்டையும் வழிநடத்துவார் எனவும் திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார். இறுதியாக நகர திராவிடர் கழக செயலாளர் பு.செந்தில்குமார் நன்றியுரையாற்றினார்.
சிறப்பு செய்தல்
தொடக்கத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய புரச்சிக்கவிஞர் பாரதிதாசன் கலைக்குழு ச.சித்தார்த்தன், கோபு.பழனிவேல், பாவலர் பொன்னரசு, டாக்டர் உறந்தை கோபு மற்றும் இசைக் கலைஞர்க்ளுக்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வராசு, ஒரத்தநாடு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகமதுகனி, பேய்கரம்பன்கோட்டை மணியன், கண்னை கிழக்கு ஊ.ம.தலைவர் சி.மாரி முத்து, மா.அழகிரிசாமி, சி.அமர்சிங், மு.அய்யனார் ஆகியோர் சிறப்பு செய்தனர்.
அமைச்சர் கோவி.செழியன் அவர்களுக்கு மாட்டச் செயலாளர் அ.அருணகிரி, வடக்கு ஒன்றியத் தலைவர் இரா.துரைராசு ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தனர்.
கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர் களுக்கு நகர செயலாளர் பு.செந்தில்குமார், நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன் ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
விடுதலை சந்தா
குலமங்கலம் பெரியார் பெருந்தொண்டர் மணியன் அவர்கள் ஒரு ஆண்டுக்கான விடுதலை சந்தா ரூ.2000த்தை வழங்கி மகிழ்ந்தார்.
நிகழ்வில் பங்கேற்றோர்
கும்பகோணம் நகரத் தலைவர் வழக்குரைஞர் ரமேஷ், மன்னார்குடி மாவட்ட துணைச் செயலாளர் விக்ரபாண்டியம் புஸ்பநாதன், வல்லம் நகரத் தலைவர் ம.அழகிரி, மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் யோவான், பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ந.எழில், வீதிநாடக கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாவட்ட மகளிரணி தலைவர் அ.கலைச்செல்வி, பெரியார் சமூக்காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாவட்ட ப.க துணைத் தலைவர் பெரியார்கண்ணன், மாவட்ட ப.க இணைச்செயலாளர் ஆ.லெட்சுமணன், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர இணைச்செயலாளர் இரா.வீரக்குமார், திருவோணம் ஒன்றிய செயலாளர் சில்லத்தூர் சிற்றரசு, தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன், திருவையாறு ஒன்றியத் தலைவர் சா.கண்ணன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் க.சுடர்வேந்தன், வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல், வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் இராஜதுரை, வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மதியழகன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், திருவையாறு நகரத் தலைவர் கவுதமன், வடக்கு ஒன்றிய தொழிலாளரணி செயலாளர் ப.இராஜகோபால், தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.ரஞ்சித்குமார், ஒரத்தநாடு நகர துணைத் தலைவர் மு.சக்திவேல், கே.எஸ்.பி..ஆனந்தன், தெற்கு ஒன்றிய தொழிலாளரணி செயலாளர் மா.கவுதமன், நதர துணைத் தலைவர் மு.சக்திவேல், வீரமணி மளிகை உரிமையாளர் வீ.அகிலன், கவின் மளிகை உரிமையாளர் இரா.செந்தில்குமார், ஒன்றிய மாணவர் கழக செயலாளர் க.செழியன், எலந்தவெட்டி க.ஆதவன், ஊரச்சி திருநாவுக்கரசு, நெடுவை தோ.தம்பிக்கண்ணு, ஆயங்குடி மாதவன், மண்டலக்கோட்டை செந்தில், மன்னை மாவட்ட ப.க.தலைவர் வீரமணி, திருவையாறு கவுதமன், நகர இளைஞரணி துணைச்செயலாளர் வி.மாதவன், சடையார்கோவில் குழந்தைவேல், நமச்சிவாயம், தஞ்சை வீ.மகிழ்னன், ஜெயமணிகுமார், வடசேரி இராமசாமி, வடசேரி. குப்புசாமி, தஞ்சை புதியபேருந்து நிலையம் பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், கன்ணை கு.கவுதமன், நெடுவை கு.ஆனந்தன், கு.வைத்தியலிங்கம், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் அரவிந்தன், மண்டலக்கோட்டை அரவிந்தன், நெடுவை தோ.தம்பிக்கண்ணு, முக்கரை செல்வராசு, ஒக்கநாடு கீழையூர் அஞ்சம்மாள், குலமங்கலம் கு.தருமராசு, கணேசன், தஞ்சை.அ.பெரியார்செல்வன், தி.மு.க மாவட்ட வழக்குரைஞரணி பொருளாளர் தவ.ஆறுமுகம், பாப்பாநாடு வழக்குரைஞர் சோலை.இளயபாரதி, இராம.நடராசன், சிவசங்கர், தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுபாஆனந்தன், நெய்வாசல் ஊ.ம.தலைவர் தேசிகாமணி, தெலுங்கன்குடிக்காடு மே.ஊ.ம.தலைவர் பூபதி, தலையாமங்கலம் மு.ஊ.ம.தலைவர் நடராஜன், குலமங்கலம் நடராசன், அண்ணாத்துரை, ம.தி.மு.க சேதுராயன்குடிக்காடு சுப்பையன், ஒரத்தநாடு கவுன்சிலர் கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் தோழமை இயக்க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட தி.மு.க வழக்குரைஞரணி பொருளாளர் தவ.ஆறுமுகம் இல்லத்தில் அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது.