டிசம்பர் 25 , 1927 பாபாசாகேப் அம்பேத்கர் மனு சாஸ்திரத்தை எரித்த நாள் வரலாற்றில் முக்கியமான நிகழ்வு.
1818இல் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் பிராந்தியம் தவுலத் ராவ் சிந்தியா ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டிஸார் ஆட்சியின் கீழ் வந்தது.
அன்றிலிருந்து பிரிட்டனின் சட்டம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது
(16 Dec 1824 – 21 Apr 1825 Richard Moore Superintendents for Ajmer) அப்போது அங்கு சூப்பிரெண்டாக இருந்த ரிச்சார்ட் மோர் என்பவர் தனது நாள்குறிப்பில் எழுதுகிறார்.
அருகில் உள்ள 1808 – 1846: (Maharawal Jaswant Singh II) மஹரவால் ஜஸ்வந்த் சிங் என்பவரின் கீழ் டங்கர் பூர் சமஸ்தானம் இருந்தது அங்கு ஹிந்து தர்ம சட்டம் அமலில் இருக்கிறது அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மண் பானையில் தேன் எடுத்துக்கொண்டு விற்பனைக்கு கொண்டு சென்றார். அப்போது திடீரென நல்ல மழை பெய்யத் துவங்கி விட்டது, அது சந்துஸ்டி எனப்படும் ஒரு புனித நாள் அன்று குறிப்பிட்ட சில மரத்தின் இலைகள் கடவுளுக்கு பூஜை செய்ய சில பார்ப்பனர்கள் சாலை ஓரம் வைத்திருந்தனர்.
அதில் ஒன்றை எடுத்து அந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் தேன் வைத்துள்ள மண் பானையை மூடியுள்ளார். இதனைக் கண்ட பார்ப்பனர்கள் தங்களின் விரதம் கெட்டுப் போய் விட்டதாக மன்னரிடம் புகார் அளித்தனர். மன்னர் இதற்கு என்ன தண்டனை என்று திவானிடம் கேட்க திவான்.
புனித நாள்களில் கடவுளுக்குப் படைக்கப்படவேண்டிய பொருளை தொட்டது, மற்றும் விரதமிருந்த பண்டிதர்களின் மத உணர்வை புண்படுத்தியது இரண்டும் மன்னிக்க முடியாத குற்றம் ஆகவே அந்த பழங்குடி இளைஞரின் கையை வெட்டி விடுங்கள் என்று கூறினார்.
இதனை அடுத்து மன்னர் அவரைப் பிடித்து வர ஆணையிடுகிறார்.
இதனைத் தெரிந்துகொண்ட அந்த இளைஞர் இரண்டு நாட்களாக படை வீரர்களிடமிருந்து தப்பி ஓடி பிரிட்டீஸ் சட்டம் அமலுக்கு உள்ள அஜ்மீருக்குள் சென்று விடுகிறார்.
அங்கு டங்கர்பூர் வீரர்கள் சென்று சூப்பிரெண்டாக இருந்த ரிச்சர்மோரிடம் அந்தப் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞனை தங்களின் ஒப்படையுங்கள் என்று கேட்கின்றனர்.
அதற்கு ரிச்சர்ட் மோர் ஏன் என்று கேட்ட போது படை வீரர்கள் விவரத்தைக் கூறவே இளைஞர் எங்கள் பகுதியில் இருக்கும் வரை அவனை நீங்கள் எதுவும் செய்யக் கூடாது என்று ரிச்சர்ட் மோர் என்று எச்சரித்து அனுப்பிவிட்டார்.
பாபாசாகேப் அம்பேத்கர் மனுதர்ம சட்டத்தை எரிக்க பல காரணங்கள் உண்டு அதில் இதுவும் ஒன்று.