பகுத்தறிவு – சமூகநீதி – திராவிட இயக்கத்தின் தீரமிக்க குரல் திரு. பெரியார் ராமசாமியின் நினைவு நாளில் அவரை வணங்குகிறேன். அவரது உறுதிமிக்க சமூகநீதிக் கொள்கைகள் சமூகத்தில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன, அனைவருக்கும் அற்புதமான எடுத்துக்காட்டாக இன்றும் இருக்கிறது.
– டி.கே.சிவக்குமார், கருநாடக துணை முதலமைச்சர்.
[அய்யாவின் நினைவு நாளில் கன்னட மொழியில் வெளியிடப்பட்ட சமூக வலைதளப் பதிவின் தமிழாக்கம்.]
சிந்தனையாளர், புரட்சியாளர், மக்களை சுயமரியாதையின் பாதையில் திருப்பி சமூக மாற்றத்தை ஏற்படுத்திய ஈ.வெ.ராமசாமி பெரியாரை நினைவு கூருகிறோம்.
– வந்தனா சோன்கர், கல்வியாளர்,
முற்போக்குச் சிந்தனையாளர், மராட்டிய மாநிலம்.
மூடநம்பிக்கை, மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாத சக்திகளுக்கு எதிரான போராளி, சமூகநீதிக்களத்தின் வீரன் ராமசாமி பெரியாருக்கு கோடி கோடி வணக்கங்கள்.
– தீபக் குமார் கவுதம், ஆசாத் சமாஜ்வாடி கட்சி.
துணைத் தலைவர் சராவஸ்தி (பீகார்).
திராவிட இயக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர், மண்ணின் மைந்தர்களின் நாயகன், சமூகநீதியின் சீர்மிகு சிந்தனையாளர், மூடப்பழக்க வழக்கங்களின் கடும் எதிரி, பெரியார் ராமசாமியின் நினைவு நாளில் வணக்கங்கள்
– பேராசிரியர் முனைவர் சிறிகாந்த் கெய்க்வாட்., மேனாள் தலைவர்,
மகாத்மா பஸ்வேஸ்வர் கல்லூரி,
லாத்தூர், மகாராட்டிரா.
பகுத்தறிவுவாதி, அறிவியல் தொலைநோக்காளர், சுயமரியாதை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வாழ்நாள் முழுவதும் போராடியவர், வர்ணமுறையின் விரோதி ஈ.வெ.ராமசாமி பெரியார் நினைவு நாளில் அவரை வணங்குகிறோம்.
– அசோக் சித்தார்த், நாடாளுமன்ற உறுப்பினர்
தந்தை பெரியார் குறித்து ஆய்வு நடத்திவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பத்ரி பாய் என்பவர் அய்யாவின் போராட்டங்கள் குறித்து ஆண்டு தேதி சுருக்கமான விவரங்களோடு ஹிந்தியில் பதிவிட்டு அவரது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
இம்மண்ணின் மக்களின் உரிமைகளை மீட்க வந்த தந்தை பெரியார், வர்ணமுறை, ஏய்த்துப் பிழைக்கும் சாமியார் கூட்டம், மனுவாதம் இவற்றை வேரோடு அறுத்தெறிந்த புரட்சியாளர் – அவரது நினைவு நாளில் அவரை வணங்குவோம்.
– மருத்துவர் சரவண் மேக்வால்,
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் –
புரட்சிகர இளைஞர்கள் இயக்கம்.
மூடநம்பிக்கை ஒழிப்பு, சமத்துவத்தின் பேரொளி, துவண்டுபோகாத போராளி, பெண்ணுரிமைக்கான ஒன்றுபட்ட குரல். பகுத்தறிவு தொலைநோக்காளர், திராவிட இயக்கத்தின் தலைமை ஈ.வெ.ராமசாமி பெரியாரின் நினைவு நாளில் அவருக்கு வணக்கங்கள்.
– சபரிதா வர்மா, அட்லி, (அரியானா),
சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவர்
தந்தை பெரியார் நினைவு நாளில் அவரது கருத்துகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு நினைவு கூர்ந்த மகாத்மா ஜோதிராவ் புலேவின், சமாஜ்சோதக் அமைப்பின் புனே தலைவரான சீமா அம்பெத்கர்.
பீகாரைச் சேர்ந்த நிதி என்ற பெண் ஊடகவியலாளர், தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் இரண்டு குழந்தைகள் பேசும் அறிவியல் சிந்தனை கொண்ட காட்சியோடு தந்தை பெரியார் கூறிய “நாடு முன்னேறாமல் போனதற்கு காரணம் கோவில் கோவிலாக போய் நேரத்தை வீணடித்ததுதான்” என்பதை ஹிந்தியில் எழுதி அய்யாவின் நினைவு நாளில் வணக்கம் தெரிவித்துள்ளார்.
Ashish Vivek Merukar @AMerukar
Dec 24
Remembering the legend of Social Justice #Periyar on his death anniversary, we need ideology of Periyar for bright future of India. #PeriyarForever
தந்தை பெரியாரின் சிந்தனைகளை இந்தியாவெங்கும் கொண்டு சென்று ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவோம் என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞர் அம்பேஷ் விவேக் மரூக்கர் பதிவிட்டுள்ளார்.