அருமைத் தோழர்களே, வரும் 28,29 சனி, ஞாயிறுகளில் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் தேசிய மாநாடு – பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற உள்ளது.
தமிழர் தலைவர் ஆசிரியர், தமிழ்நாடு அமைச்சர் மாண்புமிகு சிவசங்கர், மானமிகு ஆ. இராசா எம்.பி., இனமுரசு சத்யராஜ், தி.மு.க. ஊடகப் பிரிவுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், ஆகியோரும், அகில இந்திய அளவிலான பகுத்தறிவாளர்களும் பங்கேற்கின்றனர்.
மூடநம்பிக்கைக் கரையான்கள் மக்கள் வளர்ச்சியை அரிக்கும் கால கட்டத்தில் இந்த மாநாடு, காலங்கருதிக் கூட்டப்படுவதாகும். 1970இல் தந்தை பெரியார் பகுத்தறிவாளர் கழகத்தை ரூபாய் ஆயிரம் நன்கொடை கொடுத்துத் தொடங்கி வைத்தார் என்றால் இதன் சிறப்பைக் கேட்கவும் வேண்டுமோ? திருச்சியில் சந்திப்போம் – வாரீர்! வாரீர்!!