ஹிந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பாம்! டில்லி பல்கலைக் கழகம் திட்டம்

1 Min Read

புதுடில்லி, டிச.27 நிலைக்குழுவின் முன்மொழிவின்படி, 2025-2026 கல்வியாண்டில் இருந்து ஹிந்துஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்த டில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

முனைவர் பட்டப் படிப்பு

ஹிந்துஆய்வு மய்யத்தின் நிர்வாகக் குழு, முனைவா் பட்டப் படிப்பை 2025-2026-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது.

இந்தத் திட்டம் முன்னதாக தற்போதைய கல்வியாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.ஹிந்துஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தும் முயற்சி மாணவா்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஹிந்துஆய்வு மய்யத்தின் இணை இயக்குநா் பிரோ்ணா மல்ஹோத்ரா கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

எங்கள் நிலைக்குழு குழு ஹிந்துஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பைத் தொடங்க பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்த விசயம் கல்விக் குழுவின் முன் வைக்கப்படும். மாணவா்கள் மய்யத்தை அணுகி, ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனா். குறிப்பாக, ஏற்கெனவே ஹிந்துஆய்வுகளில் ஜேஆா்எஃப் மற்றும் நெட் (என்இடி) தகுதி பெற்றவா்கள் பங்கேற்பது குறித்து மாணவா்கள் விசாரித்து வருகின்றனா். ஒரு முதன்மை நிறுவனமாக, டில்லி பல்கலைக்கழகம் அத்தகைய வாய்ப்புகளை வழங்குவதற்கும், ஹிந்துஆய்வுகளின் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று அவா் கூறினார். ஆரம்பத்தில், ஹிந்துஆய்வு மய்யம் பொருந்தக்கூடிய இடஒதுக்கீடு மற்றும் கூடுதல் பிரிவுகளின் கீழ் உள்ள இடங்களை உள்ளடக்கிய 10 இடங்களை வழங்கக்கூடும். மய்யத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தேவைகளைப் பொறுத்து எதிர்காலத்தில் இடங்கள் அதிகரிக்கக்கூடும் என்று முன்மொழிவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 21, 2024 அன்று எடுக்கப்பட்ட ஹிந்துஆய்வு மய்யத்தின் நிர்வாகக் குழுவின் முடிவின் தொடா்ச்சியாக, 2025-2026 கல்வி அமா்விலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஹிந்துஆய்வுகளில் முனைவா் பட்டத்தைத் தொடங்க பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது என்று முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *