2023 –2024 நிதியாண்டில் பிஜேபி பெற்ற நன்கொடை ரூபாய் 2244 கோடி காங்கிரசுக்கு வெறும் 289 கோடி ரூபாய்

viduthalai
1 Min Read

புதுடில்லி, டிச.27 கடந்த 2023-2024 நிதியாண்டில் பாஜக ரூ.2,244 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி கிடைத்த நிலையில், காங்கிரசுக்கு ரூ.289 கோடி மட்டுமே கிடைத்தது.

அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, கடந்த 2023-2024 நிதியாண்டுக்கான நன்கொடை விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:

கடந்த 2023-2024 நிதியாண்டில் தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாஜக ரூ.2,244 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இவை ரூ.20,000-க்கும் மேல் பெறப்பட்ட நன்கொடை ஆகும். இது முந்தைய 2022-2023 நிதியாண்டைப் போல 3 மடங்குக்கும் அதிகம்.

இதே காலத்தில் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரசுக்கு வெறும் ரூ.288.9 கோடி மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.79.9 கோடியாக இருந்தது.

தெலங்கானாவைச் சேர்ந்த கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ரூ.580 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது காங்கிரஸ் பெற்ற நன்கொடையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக புருடென்ட் தேர்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு ரூ.723.6 கோடியும், காங்கிரசுக்கு ரூ.156.4 கோடியும் வழங்கி உள்ளது. அதாவது பாஜகவின் ஒட்டுமொத்த நன்கொடையில் 3-இல் ஒரு பங்கும், காங்கிரஸின் நன்கொடையில் 50 விழுக்காடும் இந்த அறக்கட்டளையிடமிருந்து கிடைத்துள்ளன.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில்
96 பேருக்கு புற்றுநோய்

இந்தியா

உலகிலேயே அதிகபட்சமாக டென்மார்க்கில் அதிகம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. அங்கு 1 லட்சம் பேரில் 335 பேர் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக அயர்லாந்து (326), பெல்ஜியம் (322), ஹங்கேரி (321). ஃபிரான்ஸ் (320), நெதர்லாந்து (315), ஆஸ்திரேலியா (312), நார்வே (312) ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் 163ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒரு லட்ம் பேரில் 96 பேர் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *