வைக்கம் வெற்றி முழக்கம்-தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா
வாழ்வியல் சிந்தனைகள் பதினெட்டாம் பாகம் நூல் வெளியீடு
இராணிப்பேட்டை, டிச.27- 22.12.2024 அன்று காலை 10 மணிக்கு வாலாஜாபேட்டை மாஸ் மண்டபத்தில்நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி தலைவர்
லோ.செல்வி தலைமையேற்றார்.
கலைமாமணி திருத்தணி முனைவர் பன்னீர்செல்வம், காஞ்சி உலகஒளி ஆகியோரின் இனிய பாடல்களோடு கூட்டம் தொடங்கியது.
லோ.மணியம்மை வரவேற்றார். காவேரிப்பாக்கம் மகாலெட்சுமி, ஆசிரியர் யாழினி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தந்தைபெரியார் படத்தினை திறந்து வைத்து மாவட்ட அமைப்பாளர் சொ.சீவன்தாசு, அன்னை மணியம்மையார் படத் தினை திறந்து வைத்து தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப்பன், கருத்துரையாற்றினார்கள்.
விடுதலையின் வீரவரலாறு
விடுதலையின் வீரவரலாறு என்ற தலைப்பில் மாவட்ட ப.க.தலைவர் போ.பாண்டுரெங்கன், உண்மைஇதழ் உணர்த்தும் பாடங்கள் என்ற தலைப் பில் மாவட்ட ப.க.செயலாளர் த.இராமு, பெரியார் பிஞ்சு இதழின் பெருமைகள் என்ற தலைப்பில் மாவட்ட கழக துணைத்தலைவர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் அ.வெ.முரளி, வாலாஜா இராமலிங்கம், ஆசிரியர் யாழினி, மதிமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வாழ்வியல் சிந்தனைகள் 18-ஆம் பாகத்தை அறிமுகம் செய்து மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் உரையாற்றினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மேனாள் மண்டல செயலாளர் வழக்குரைஞர். இரத்தின. நற்குமரன் நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் அவர்கள் ஆசிரியராக, மருத்துவராக, உளவியல் வல்லுநராக, நட்பை, உறவைபேணுவதில், ஒழுக்கத்தை போதிப்பதில் தத்துவ வித்தகராக திகழ்வதை வாழ்வியல் சிந்தனைகள் நூலில் அறியமுடிகிறது.
ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு நலமோடு வாழ்ந்து நமக்கு அறிவு புகட்ட வேண்டுமென தெரிவித்து மகிழ்ந்தார்.
தோழர்கள் குடும்பத்தோடு வந்து நூலினை பெற்றுக் கொண்டார்கள்.
நிறைவாக கழக பேச்சாளர் ஆரூர் தே.நர்மதா தந்தை பெரியார் கொள்கை உலகமயமாகிவருவதையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஓய்வின்றி உழைத்து வரும் அரும் தொண்டினை விளக்கியும், ஒன்றிய அரசின் சூழ்ச்சியின் முறியடிக்க ஆசிரியர் அவர்களின் அறிக்கையை, பேச்சை, விடுதலை நாளிதழில் அனைவரும் படித்து பரப்பவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000 நன்கொடை வழங்கிசிறப்பித்த மாவட்ட ப.க. துணைத்தலவர் காவேரிபாக்கம் போ.பாண்டுரெங்கன்- மகாலெட்சுமி இணையர்களுக்கு பயனாடை போத்தி பாராட்டப்பட்டது.
பார்வையிழந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் முனைவர்முகிலன்-யாழினி இணையர்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.1,500/வழங்கி மகிழ்ந்தார்கள்.
நிகழ்ச்சிவருகைதந்த தோழர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப் பட்டது. விழா எழுச்சியோடு நடை பெற பெரிதும் துணை நின்ற மாவட்ட ப.க.தலைவர் த.க.பா.புகழேந்திக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தலைவர் சு.லோகநாதன், மாவட்டச் செயலாளர் செ.கோ
பி ஆகி யோருக்கு தோழர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.