மலேசியாவில் 11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடங்கியது- மாநாட்டு முதல்நாள் நிறைவுப் பேருரை ஆற்றுகிறார் தமிழர் தலைவர்

Viduthalai
1 Min Read

கோலாலம்பூர், ஜூலை 21- மலேசியாவில் இன்று (21.7.2023) 11 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசிய நட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், மாநாட்டுப் பாடலுடன் கோலாலம்பூரில் எழுச்சியுடன் தொடங்கியது. 

மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம் பூரில் இன்று (21.7.2023) முதல் 3 நாள்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (International Association for Tamil Research) 11ஆம் மாநாடு நடைபெறுகிறது. ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாள் மாநாட்டினை மலேசிய நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் தொடங்கி வைக் கிறார். 

தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், பொது நல செயற்பாட்டாளர்கள், கல்லூரி – பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப் பித்து உரையாற்றுகிறார்கள்.

முதல் நாளான இன்று (21.7.2023) இம் மாநாட்டின் பொது அரங்கில் மலேசிய நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு  ‘வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல்நாள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

நாளை நடைபெறுகின்ற மாநாட்டின் இரண்டாம் நாள் (22.7.2023) நிகழ்வில்  மலேசியப் பிரதமர் தொடங்கி வைத்திட உள்ள அமர்வில் சிறப்பு அழைப்பாளராகவும் தமிழர் தலைவர் பங்கேற்கிறார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச்செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மலேசிய திரா விடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், பெரியார் பன்னாட்டமைப்புப் பொறுப் பாளர்களும்   மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *