மலையாள அறிவு லகில் சிறந்த எழுத்தாள ராகவும், மூத்த பத்திரி கையாளராகவும், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பெரும் சாதனை படைத்தவரான 91 வயது நிரம்பிய பத்மபூஷன் விருதாளர்
எம்.டி. வாசுதேவன் அவர்கள் நேற்று (25.12.2024) காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். தன்னுடைய எழுத்துக்களில் ஜாதி, சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.