முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.12.2024) சென்னை, தியாகராயர் நகர், பாலன் இல்லத்தில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர்
இரா. நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில், அவருக்கு பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவர் சிலை மற்றும் புத்தகத்தை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இவ்விழாவில், அமைச்சர்கள் கே.என். நேரு, முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள் தி. ராமச்சந்திரன், அப்துல் சமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் பெரியசாமி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வசீகரன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே. சிற்றரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இரா. நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள்
Leave a Comment