தேனி அல்லிநகரத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கழக இளைஞரணிக் கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் நதியப்பன் தலைமையில் தேனி மாவட்ட இளைஞர் அணி தலைவர் லோ.முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் சுருளிராசு, மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன் முன்னிலை வகித்தனர். போடி ஒன்றிய இளைஞரணி தலைவர் சென்ராயன் நன்றி கூறினார்.