திருப்பத்தூர், டிச. 23- பெரியாரின் பெருந் தொண்டர், தந்தை பெரியாரோடு இறுதி நாள் வரை பயணித்தவர், சுய மரியாதை சுடரொளி ஏ. டி. கோபால் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் 21. 12.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஏ. டி. ஜி. தேனீர் கடை அருகிலும், காலை 10.30 மணிக்கு கழக மாவட்ட அலுவலகத்திலும் அய்யா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து தோழர்கள் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் சி.எ.சிற்றரசன், ஏ.டி.ஜி.ஜித்து, ஏ.டி.ஜி.இராவணன்,நகர செயலாளர் ஏ.டி.ஜி. சித்தார்த்தன் மாவட்ட துணைத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் தொழிலாரணி கே. மோகன், நகர தலைவர் காளிதாஸ்,மகளிரணி தலைவர் கற்பகவல்லி, நகர இளைஞரணி அமைப்பாளர் கா.நிரஞ்சன், மாவட்ட கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோ. திருப்பதி, சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர் தா. பாண்டியன், கந்திலி ஒன்றிய செயலாளர்.இரா. நாகராசன், சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர் கொ. ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளரணி அமைப் பாளர் க. முருகன், தொழிலாளரணி ஆலோசகர் அக்ரி அரவிந்த், சுந்தரம் பள்ளி கிளைத் தலைவர் கோ. சங்கர், இலக்கிநாயக்கன்பட்டி கிளை தலைவர் சரவணன், இலக்கி நாயக்கன்பட்டி கிளை செயலாளர் லட்சுமணன், இளைஞரணி க.இனியவன், க. உதயவன் மற்றும் தி.மு.க.நகர அவைத் தலைவர் சிறீதர், ம.தி.மு.க.கவுன்சிலர் சரவணன், மேனாள் சேர்மன் சு.அரசு, தி.மு.க.கவுன்சிலர் வெள்ளை ராஜா, மாவட்ட இந்து அற நிலையத்துறையின் தலைவர் சந்திரசேகர், ஜெயராஜ் ஆகியோர்கள் பங்கேற்று வீர வணக்கம் செலுத்தினார். நினைவு நாளை முன்னிட்டு ஏ.டி.ஜி.தேனீர் கடையில் ஒரு “டி” யின் விலை ரூ. 5.00க்கு பொதுமக்களுக்கு விநியோகிக் கப்பட்டது.