‘அரசர் மறைந்தார் அரசர் வாழ்க !’
அன்றைய ஆங்கில வாழ்த்திது சிறப்பாய்!
‘பெரியார் நினைவு நாள் பெரியார் வாழ்க!’
இன்றைய வாழ்த்து உலகமே வியக்க!
அரசராய்ப் பிறந்தார் ஏழ்மையில் வாழ்ந்தார்
அனைத்தையுங் கொடுத்தார்
அறிவையே கொடுத்தார்!
சுயமரியாதை தத்துவம் விதைத்தார்
‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’
‘அனைவர்க்கும் அனைத்தும் அதுவே வாழ்க்கை!’
‘மூடநம்பிக்கை மானுடக் கேடு’
‘ஜாதி ஒழிப்போம் சமத்துவம் காண்போம்!’
உலகே ஒலித்திடும் உன்னத வார்த்தைகள்!
‘பெரியார் மறைந்தார்! வாழ்க பெரியார்!’
– சோம. இளங்கோவன்
பெரியார் பன்னாட்டமைப்பு