மேனாள் ஆளுநருக்கு உண்மை தெரியவேண்டாமா? அண்ணாமலையைப் போல் வாய்க்கு வந்ததைச் சொல்லலாமா?
திமுக ஆட்சி கலைக்கப்பட்டது அவசர நிலைப்பிரக டனம் செய்த பிறகு 1976, ஜனவரி 31 ஆம் தேதி.
சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதோ 1976, பிப்ரவரி 3 ஆம் தேதி. மேலும், சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் விஞ்ஞானப் பூர்வ ஊழல் என்று எந்த இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தெளி வான சான்றுகள் இல்லை, அவதானிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றே சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கையில் உள்ளது.
தமிழிசை நேரம் எடுத்து தேடினால் கிடைக்கும். ஆகவே, வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை அப்படியே ஒப்புவிப்பது அழகல்ல!