பெங்களூரு, டிச.21 பெங்களூருவில் 3-ஆவது தமிழ்ப் புத்தகத் திருவிழாவை இஸ்ரோ மேனாள் தலைவர் கே.சிவன் தொடங்கி வைத்தார்.
தமிழ்ப் புத்தகத் திருவிழா
கருநாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3-ஆவது தமிழ்ப்புத்தகத் திருவிழாவை இஸ்ரோ மேனாள் தலைவர் விஞ்ஞானி கே.சிவன் தொடங்கி வைத்தார்.
இதன் தொடக்க விழாவில் பெங் களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் வி.ராம்பிரசாத் மனோகர் அய்ஏஎஸ், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் எஸ்.டி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரும் 29-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் மாலையில் புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கன்னட எழுத்தாளர் எஸ்.ஜி.சித்தராமையா, பகுஜன் சமாஜ் கட்சியின் மேனாள் தென் னிந்திய ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், மேனாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கொ.வீ.நன்னன், எழுத்தாளர் என்.சொக் கன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தள்ளுபடி விலை
30-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் பாபாசாகேப் அம்பேத்கரின் பன்முக பார்வை, மாபெரும் தமிழ்க் கனவு, தெற்கிலிருந்து ஒரு சூரியன் உள்ளிட்ட அனைத்து நூல்களும் 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புத்தக திருவிழாவின் இறுதி நாளன்று கருநாடகாவில் தமிழர்களின் நலனுக்காக பாடுபட்ட 20 பேருக்கு சிறந்த ஆளுமை விருது வழங்கப்படுகிறது.
கருநாடகத் தமிழர்களின் உரிமை களுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர் சி.ராசனுக்கு இந்த ஆண்டின் கருநாடக தமிழ்ப் பெருந்தகை விருது வழங்கப் படுகிறது.