“பன்னாட்டு மாடல்” ஆக பரிணாமம் பெற்ற “திராவிட மாடல்” தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று, வென்று நிற்பது எப்படி?
‘தி வயர்’ இணைய தளத்தில் ராஜன் குறை கிருஷ்ணன் விளக்கம்
ராஜன் குறை கிருஷ்ணன்
(டில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியர்)
சுரண்டல் பார்ப்பனிய சமூக அமைப்புக்கு எதிரான மக்க ளின் எதிர்வினை வெளிப்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் திராவிட மாடல் தேர்தல் ஜனநாயக அடித் தளத்தில் மக்களுக்கு புதிய சமத்துவ உணர்வை உருவாக்கியது. அந்த வகையில், அ.கலையரசன், எம்.விஜயபாஸ்கரின் திராவிட மாடல் புத்தகத்தில் உள்ள கருத்தியலை இங்கே சிந்தனைக்கு அளிக்கிறேன்.
தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரத்தைப் பார்த்தால் ஒரு கருத்தியலுக்கு மத்தியில் இருப்பவர்கள் அதன் மறுபக்கத்திலிருந்து வந்தவர்களைச் சந்திப்பது போல உணர முடிகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த புத்தகத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக் குறிகாட் டிகள் குறித்த கடினமான தரவுகள், முழுமையான நுண்ணறிவுத் தொகுப்பாக தரப்பட்டுள்ளது. அவை அரசியல் செயல்பாடுகளுக்கான காரண, காரிய விளக்கமாகவும் இருக்கிறது. அதை நூலாசிரியர்கள் அறிவார்ந்தவர்களும், மற்றவர்களும் ஆர்வத்துடன் அறிந்து கொள்ளும் விதத்தில் அளித்துள்ளனர்.
மாறுபட்ட துணை தேசியம்
தமிழ்த் தேசியம்
திராவிட மாடல் இந்தியாவிற்குள் ஒரு முக்கிய மான மாறுபட்ட துணை தேசியமாக அமைந்து, அரசியல் ரீதியான அணிதிரட்டும் செயல்முறைகளை முன்னெடுத்து ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற வலுவான வாதத்தை முன் வைத்து நடந்து செல்கிறது. ‘திராவிடம்’ என்ற அடைமொழி, திராவிட தமிழ் அடையாளம் என்ற பரந்த சமத்துவமும், ஜாதி எதிர்ப்பும், சமூகநீதிக் கருப்பொருள்களின் அடிப் படையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மக்களை ஓரணியில் திரட்டியது. தி.மு.க. 1967இல் ஆட்சிக்கு வந்ததும், ‘திராவிட’அரசாக, திட்டமிடல், விநியோகம் உள்ளிட்ட நிர்வாகத்தின் அன்றாட அம்சங்களை மய்யமாகக் கொண்டு முக்கிய கொள்கை முடிவுகளை மேற்கொண்டது. அவ்வகையில் திராவிட மாடல் ஆய்வு செய்வதற்குரிய தகுதியைப் பெறுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க அரசும், அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சியில் இருந்த நிலையில், தி.மு.க.வின் கொள்கைகளை கடைப்பிடித்தல் மற்றும் மற்ற கட் சியை ஒப்பிடும்போது அதில் உள்ள மாறுபாடுகள் ஆகியவை புத்தகத்தில் திரும்பத்திரும்ப வலி யுறுத்தப்படுகிறது. இரு கட்சிகளின் ஆட்சி, அதன் வளர்ச்சி மற்றும் விளைவுகள் ஆகியவை எட்டு சுருக்கமான அத்தியாயங்களில் புத்தகத்தில் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
முதல் அத்தியாயம் மாறுபட்ட துணை தேசிய வகையை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை முன்வைக் கிறது. 1960-1961 ஆம் ஆண்டில் தேசிய சராசரியை ஒட்டி இருந்த தமிழ்நாட் டின் தனிநபர் வருமானம் 2010-2011 ஆம் ஆண்டில் தேசிய சராசரி அளவிலிருந்து 150% க்கும் அதிகமாக ஆனது. அதே நேரத்தில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை விகித குறைப்பும் வியத்தகு அளவில் இருந்தது. தேசிய சராசரியை விட அது அதிகமாக இருந்த நிலையில், அதிக தனிநபர் வருமானத்தைப் பதிவு செய்யும் மகாராட்டிரா மற்றும் குஜராத்தை விடக் குறைவாக, நாட்டிலேயே மூன்றாவது குறைந்த இடத்தில் உள்ளது. எனவே ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி திராவிட தமிழ் என்ற மாறுபட்ட துணை தேசியம் ஒரு பயனுள்ள ஆய்வுப் பொருளாகிறது.
இரண்டாவது அத்தியாயம், மறுபகிர்வு என்ற ஒரு குறிப்பிடத்தக்க பொதுப்பார்வையை வளர்த்தெடுத்த அரசியல் மூலம் அணி சேர்த்தல் என் பது பற்றி ஒரு விரிவான கோட்பாட்டை விளக்கும் பார்வையை அளிக்கிறது. அது சாமானிய மக்களின் உரிமை என்ற உணர்வை மறுபகிர்வு செய்யும் அரசியல் நெறி முறையாகவும் ஆனது.
மூன்றாவது மற்றும் நான்காவது அத்தியாயங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அடைந்த முன்னேற் றங்கள் வெளிப்படுகின்றன.
மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது முக்கியமான துறைகளில் முன்மாதிரியாக நிகழ்த்தப் பட்ட சாதனைகளை அவை சொல்கின்றன.
அய்ந்தாவது ஒரு முக்கியமான அத்தியாயம். மூலதன வளர்ச்சி மற்றும் ஜனநாயக மயமாக்கலின் பரந்த அடித்தளம் பற்றிப் பேசுகிறது. அதைத் தொடர்ந்து ஆறாவது மற்றும் ஏழாவது அத்தியாயங் களில் கிராமப்புற மாற்றம் மற்றும் நகர்ப்புற தொழி லாளர் பற்றிய ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதி அத்தியாயம், திராவிட மாடல் செயலாக்க முறைகளில் உள்ள வரம்புகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அதில் ஒரு சீரான பார்வையைப் பெறுகிறோம். பகுத்தறிவு சமத்துவவாதி ரோசன் வல்லன் என்பவரால் பரிந்துரைக்கப்பட்ட உயர்மட்ட ஆட்சியாளர்கள் தங்கள் அடையாளத்தை அவசிய மாக்கும் நிலைப்பாடு போல, வரம்புகள் மீதான அவர்கள் கவனம் சில சமயம் வெளிப்படையாக இல்லாமல், தேவையற்றதாக தோன்றுகிறது. அனுபவத் தரவுகள் அல்லது இதர ஆதாரங்கள் அளிப்பதன் மூலம் அது பரிந்துரை செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டின் சூழலில், திராவிட மாடலை ஒழிக்க முனைந்த ஜாதி அமைப்பின் மேலாதிக்கம் மற்றும் கருத்தியல் தாக்கங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஜாதி என்ற அடையாளத்தின் அனுபவ நடைமுறைகளை படிப்படியாக குறைக்கவும், அதை ஒழுங்குபடுத்துவதையும் மட்டும் அது சுட்டிக்காட்டு கிறது. இது புத்தகத்தின் மறைமுகக் கருப்பொருளாகவும் அமைந்துள்ளது. இந்த கருப்பொருள் உண்மையில் தாமஸ் பிக்கெட்டி என்ற பொருளாதார வல்லுநரின் உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட மூல தனம் மற்றும் கருத்தியலோடு மிக விரிவாக இயைந்து வருகிறது.
உள்ளூர் வரலாறு
உலகளாவிய வடிவமைப்பு
உலக வரலாற்று மாற்றங்களில் மானுடவியல், கட்டமைப்பு செயல்பாட்டு பரிமாணங்கள் குறித்து பொருளியல் வல்லுநர் தாமஸ் பிக்கெட்டியின் பிரமாண்டமான பார்வைகளுடன் இணைந்து திராவிட மாடல், மூலதனம் மற்றும் கருத்தியல் என்ற தலைப்பில் பொருத்தமாக குறிப்பிடப்படுகிறது. வளர்ச்சிக் குறியீடுகளுடன் ஒப்பீடு என்பது திராவிட மாடலானது மற்ற இந்திய மாநிலங்களைவிட முதன்மையான செயல்திறனுடன் இருப்பதை காட்டுகிறது. திராவிட அரசியல் பொருளாதார கருத் தியல் அடிப்படைகள் குறித்த ஆய்வு, பொருளியல் வல்லுநர் பிக் கெட்டி உருவாக்கிய முன்னுதாரண ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
திராவிட மாடல் என்பது மூலதனம் மற்றும் கருத்தியலை முன்வைக்கும் நிலையில், அனுபவ ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தமிழ்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்துவதால் அதை வெறும் கருத்தியலாக மட்டுமே விட்டு வைக்கவில்லை. அந்த வகையில், மூலதனம் மற்றும் கருத்தியலை உலகள வில் பகுப்பாய்வு செய்து அவற்றின் அய்ரோப்பிய படிநிலைகள் பற்றியும் அறிந்த பொருளியல் வல்லுநர் பிக்கெட்டி இந்தியா, சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளில் அவற்றில் உள்ள மாறுபாடுகள்மீது கவனம் செலுத்துகிறார்.
நிக்கோலஸ் டிர்க்ஸ் படைப்புகள், அமர்த்தியா சென் மற்றும் ஜீன் ட்ரீஸ் ஆகியோரைக் குறிப்பிடுவதன் மூலம் இந்தியாவின் பின்காலனித்துவ வளர்ச்சி, வரலாற்றின் துணை தேசிய வேறுபாடுகளை ஆய்வு செய்த பொருளியல் வல்லுநர் பிக்கெட்டி தமிழ்நாட்டையும், பெரியாரையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். அவர் கேரளாவை ஒரு எடுத்துக்காட்டு மேற்கோளாக மட்டும் வைக்கிறார். அவ்வகை யில், உலகளாவிய மாற்றத்தை உருவாக்கும் செயல் முறைகளில் பெரியாரால் வெளிப்படுத்தப்பட்ட திராவிட மாடல், அவரது பகுத்தறிவு அடிப்படையிலான கட்டமைப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது. எனவே, திராவிட மாடல், அதன் மூலதனம் மற் றும் கருத்தியல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் படித்துணர வேண்டும்.
அது எதற்காக என்பதை சுருக்கமாக குறிப்பிடுகிறேன்
துணை தேசிய வகையான தமிழ் தேசியம் மூலம் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான பாதைகள் ஏற்படுத்தப் பட்டன என்பதை திராவிட அரசியல் சித்தாந்தத்தில் விளைந்த திராவிட மாடல் வெளிக்காட்டியுள்ளது. அப்படிப்பட்ட துணை தேசிய வகை உலகெங்கிலும் காணப்படுவதுடன், அதிகரித்து வரும் சமத்துவ மின்மை என்ற போக்கை குறைத்து, பயன்மிகு நடவடிக்கைகள் மூலம் அதை பொதுவெளியில் மறுபகிர்வு செய்வதையும் உறுதிப்படுத்துகிறது.
இந்த நிகழ்முறையை பொருளியல் வல்லுநர் பிக்கெட்டி பயன்படுத்தும் முதலாளித்துவ மாற்றம் என்ற முன்னுதாரண வகையில் சொல்ல வேண்டுமானால், மதவாதிகள் மற்றும் ஜமீன்தார்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தை, பொது உடைமைச் சமூக மாக மாற்றுவதில் திராவிட இயக்கம் முன்னின்றது என்றே கூறலாம். அதன் விளைவாக சமூக நீதியுடன் கூடிய ஜன நாயகம் உருவாகி, சமத்துவமின்மை படிப்படியாக அகற்றப்பட்டது.
திராவிடல் மாடல் கருத்தாக்கம் மத ரீதியான கருத்தியலுக்கு எதிராக இடதுசாரி பொது வுடைமை வாதத்தை உருவாக்கியதன் மூலம் நவீன தமிழ்நாட்டின் ஆரம்ப மற்றும் இடைக் கால வரலாற்றில் ஆரிய பார்ப்பன உயர் ஜாதி குடியினர் ஜாதியின் பெயரால் கட்டமைத்த சுரண்டும் சமூக கட்டமைப்பை அகற்றி, சமூகத்தை பாதுகாத்தது எனலாம்.
சுரண்டல் பார்ப்பனிய சமூக கட்டமைப்புக்கு எதிராக வெளிப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பொருளியல் வல்லுநர் பிக்கெட்டியின் சொற்களில் குறிப்பிடுவதென்றால், மதவாதிகள், உயர்குடியினர் மற்றும் விவசாய கூலிகள் அடங்கிய சமூகத்தில் நிலை தாழ்த்தப்பட்ட, உரிமை மறுக்கப்பட்டவர்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசு நிர்வாகத்தில் நியாயமாக அவர்கள் பங்கேற்கும் வகையில், திராவிட மாடலானது தேர்தல் ஜனநாயக முறையின் அடித்தளமாக அமைந்து, சமநீதி என்ற ஒரு புதிய பொதுஉணர்வை உருவாக்கியது.
அது இன்னும் வளர்ந்து, அரசு நட வடிக்கைகள் மூலம் அவர்களுக்கான தாராளவாத சித்தாந் தத்தையும் திறம்பட எதிர்கொள்ளும் திராவிடம் என்ற சொல் பார்ப்பன ஜாதியக் கருத்தியலை மறுதலிப்பதைக் குறிப்பதால்தான் அது சாத்தியமானது. திராவிட அரசியல் தகர்க்க முனைந்த ஆரியவாதத்தின் மிகவும் பழமையான நான்காம் கட்ட சமூகத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட விமர்சனச் சொற் றொடர்களான உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவை சமூக நீதியை எதிர் நோக்கி நிற்கும் மக்களுக்கான அரசியலைத் தொடர்ந்து உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு திராவிட மாடலின் சமூகப் பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.
பொருளியலாளர் பிக்கெட்டி, சமூக நீதியை சட்டபூர்வமாக்குவதற்கு அடிப்படையான ஆதிக்க ஜாதியினக் குழுக்கள் குறித்த பல்வேறு கோட் பாடுகளைப் பட்டியலிடுகிறார்.
இந்தியாவில் உயர்குடியினர் ஆரிய வம்சாவளியினராகவும், சாமானிய மக்கள் திராவிடர்கள் என்றும் கூறப்பட்டது…’ என்று குறிப்பிட்ட அவர் இந்த இடத்தில் திராவிட மாடல் தனது பங்களிப்பை துல் லியமாக கணித்து சரியாகச் செய்ததாகவும் குறிப் பிடுகிறார்.
இருப்பினும், தேர்தல் ஜனநாயக முறையில் தற்போதைய கருத்தியல் பிளவுகளான ‘இடதுசாரி பார்ப்பனவாதம்’ மற்றும் ‘வலதுசாரி வர்த்தகம்’ ஆகிய வற்றுக்கு இடையில் சிக்கலான தொடர்பை, பொருளியலாளர் பிக்கெட்டியின் நிலைப்பாட்டில் விவரிக்கும்போது புதிரான தொடர்பு ஏற்படுகிறது. பழைய சமூகத்தில் பார்ப்பனன் என்ற சொல் மதகுரு அல்லது புரோகித வர்க்க செயல்பாட்டைக் குறிக்கவோ அல்லது பரம்பரை ரீதியாக பெறப்பட்ட உரிமைகளின் தொகுப்பாகவோ அவர் பயன்படுத்த வில்லை. படித்த, அறிவார்ந்த வர்க்கமாக அது பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படும் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து இடதுசாரிகள் அந்நியப்படுத்தப் படுவதைச் சுட்டிக்காட்ட அவர் அதைப் பயன் படுத்துகிறார். திராவிட மாடல் சரியாக சுட்டிக் காட்டுவது போல, எர்ன்ஸ்டோ லாக்லாவ் மற்றும் சாண்டல் மவுபே ஆகியோர் இடதுசாரி ஜனநாயகவாத அழைப்பு விடுப்பதற்கு அதுதான் காரணம்.
பரந்த மக்களிடையே பகுத்தறிவு வாதம் எந்தளவு மாற்றத்தை ஏற் படுத்தியது என்ற கேள்விக்கான அனு பவ மற்றும் கருத்தியல் அடித்தளத் தையும், இடதுசாரிகளை பார்ப்பனமயத் திலிருந்து விடுவிப் பதில் திராவிட மாடல் எந்த அளவுக்கு வெற்றி பெற் றுள்ளது என்பதையும் திராவிட மாடல் கச்சிதமாக கட்டமைத்துள்ளது.
பொருளியலாளரான பிக்கெட்டி யின் சூத்திரப்படி, தேசிய அரசுகளின் ஏகாதிபத்திய வணிகவாதத்திற்கு எதிராக திராவிட மாடலானது சோசலிசகூட்டாட்சி முறையில் உலகளாவிய நிலைத்தன்மையை ஏற்று அங்கீகரித்துள்ளது.
திராவிட மாடல், மூலதனம் மற்றும் கருத்தியல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வாசிப்பு மூலம் திராவிடக் கருத்தியல் திறன் பற்றிய எதிர்கால ஆராய்ச்சிக்கு இது மேலும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி: ‘முரசொலி’, 21.7.2023