ஒழுக்கம், நாணயம், நேர்மை என்னும் குணங்களுக்கு நம் நாட்டில் இலக்கணமே இல்லை என்பதோடு இருப்பதாய்க் கருதப்படுபவை பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் உரியதாக ஆக்கப்பட்டுள்ளதா? அவ்விதம் ஆக்கப்படவில்லை என்பது மாத்திரமல்லாமல், சமுதாயத்தில் சில பிரிவுக்கு இவை தேவை இல்லாதபடியே சில துறைகள் அனுமதிக்கப்பட்டும் விட்டன. இப்படிச் சிலருக்கு அனுமதிக்கப்பட்டு விட்டதாலேயே அவை தொற்று நோய் மாதிரி சமுதாயத்தில் மற்ற எல்லா மக்களிடையேயும் பரவத்தக்கதாகவும், பரவ வேண்டியதாகவும் ஆகிவிட்டது களையப்பட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’