மும்பை, டிச. 20- தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கழகத்தின் சார்பில், 02-12-2024 அன்று மாலை 7.00 மணிக்கு மும்பை தாராவி கலைஞர் மாளிகையில் மிக
சிறப்புடன் நடைபெற்றது!
விழாவுக்கு மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமை வைத்தார். முன்னதாக பெரியார் பிஞ்சு க. அறிவு மலர் கடவுள் மறுப்பு கூறினார், மும்பை திக .செயலாளர் அனைவரையும் வரவேற்றார்.
ஆசிரியரின் ஓய்வறியா பணி
ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாத்தலைவரின் தலைமை உரைக்குப் பின், மும்பை பகுத் தறிவாளர் கழகத்தலைவர் அ. இரவிச்சந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் நெல்லை மாவட்ட தலைவர் பால்வண்ணன் மனிதநேய இயக்கத்தைச் சார்ந்த சங்கர் திராவிடர், ஜெய் பீம் பவுண் டேசனை சேர்ந்த தோழர் ராஜா குட்டி, மகிழ்ச்சி மகளிர் பேரவை சார்ந்த க.வளர்மதி, இதயம் அறக்கட்டளை தலைவர் அ. மகேந்திரன், திராவிடர் கழகத் தோழர் பெரியார் பாலா,மும்பை திராவிடர் கழக பொருளாளர் அ. கண்ணன் ஆகியோர் உரைக்குப்பின் இலெமூரியா அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன், மும்பைபுறநகர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அலிசேக் மீரான் ஆகியோர் பிறந்த நாள் சிறப்புரையை நிகழ்த்தினார்கள் அவர்கள் தம் உரையில் தந்தை பெரியார் அவர்களுக்குப் பின், அன்னை மணியம்மையாருக்கு பின் இந்த இயக்கம் உலகம் தழுவிய அளவில் வெற்றி நடைபோடுகிறதுஎன்று சொன்னால் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியாப்பணி ,92-வயதில் 29 வயது இளைஞரை தொடர் சுற்றுப்பயணங்கள் போராட்டங்கள் தமிழ்நாட்டு மக்களோடு மக்களாக எந்நாளும் கலந்திருக்கும் மாபெரும் மக்கள் தலைவராக ஆசிரியர் வீரமணி அவர்கள் திகழ்கிறார்கள் என்று சிறப்புரையாளர்கள் புகழாரம் சூட்டினார்கள்!
நெல்லை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் சி.வேலாயுதம் அவர்களால் தொகுக்கப்பட்டு அண்மையில் வெளியான “வாய்மையே வெல்லும்” என்கின்ற நூல் வெளியிடப்பட்டது சிறப்பு ரையாளர் சு .குமணராசன் வெளியிட முலூண்ட் ஆ.பாலசுப்பிரமணியம் அவர்களும், மும்பை திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர் என்.வி.சண்முகராசன் அவர்களும் பெற்றுக் கொண் டார்கள், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நூல்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மேனாள் மும்பை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயலாளர் மறைந்த த.மு.பொற்கோ, மகன் அன்பழகன் பொற்கோ, சோ, ஆசைத்தம்பி , அய்.செல்வராஜ் , க.இராசன் கே. எம் .அமீர் அலி தே.ஸ்டீபன் ஜெபராஜ், அப்துல் லத்திப் ,தொல். காமராஜ் த.நெல்லை குமார் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் சிற்றுண்டி தேநீர் வழங்கப்பட்டது இறுதி யில் மும்பை திராவிடர் கழக துணைச்செயலாளர் ஜே.வில்சன் நன்றி கூறினார்