நாடாளுமன்ற நுழைவு வாயிலில் தெருவில் சண்டை போடுவதைப் போன்ற சூழலை பாஜக உருவாக்கியதாக திருச்சி சிவா குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவினர் ராகுல் காந்தி மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப முயல்வதாகக் கூறிய அவர், அம்பேத்கர் விவகாரத்தில் அமித் ஷா மன்னிப்பு கேட்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.