லால்குடி, டிச. 19- நேற்று (15.12.2024) லால்குடி பகுத்தறி வாளர் கழக மாவட்டம், மண்ணச் சநல்லூரில் பகுத்தறிவாளர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாநாடு
இக்கூட்டத்தில் வரும் டிசம்பர் மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதி களில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு திருச்சிராப்பள்ளியில் நடத்திட அனுமதி வழங்கிய கழக தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கபட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
அவை மாவட்டம் முழுவதும் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்பும் வகையில் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது, பெண்களை பெருமளவில் சமூக விழிப்புணர்வு பணிகளில் பங்குபெறச் செய்தல், வாரம் ஒருமுறை சிறிய அளவில் கலந்துரையாடல் கூட்டம் நடத்துதல், துண்டு பிரசுரங்கள் மூலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் செய்தல், திருச்சிராப்பள்ளியில் நடைபெறவுள்ள மாநாட்டில் பெருமளவில் தோழர்களை பங்கு பெற செய்தல், பயிற்சி பட்டறைகள் நடத்துதல், மனித பரிணாம வளர்ச்சி உட்பட அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடாம் விடுதலையை பரப்புதல், போதைப்பொருள்கள் ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளுதல், கடவுள் புராணங்களில் உள்ள பொய் புரட்டுகளை மக்களுக்கு எடுத்துரைத்தல் போன்ற செயல் களில் ஈடுபடுவது என்று தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக மறைந்த ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு வீ.அன்புராஜா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் தலைமை வகித்தார், பாபுராஜ் பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணை தலைவர், மண்ணச்சநல்லூர் கழக ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, லால்குடி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கூட்டத்தில், சிவசங்கர், முத்துசாமி, பெரியசாமி, பகுத்தறிவாளர் கழக லால்குடி மாவட்ட அமைப்பாளர் பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்துகொண்டு பகுத்தறிவு கருத்துகளையும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.