விருத்தாசலம், டிச.18 விருத்தாசலம் வட்டம் வெளிகூனங்குறிச்சி கழகத்தோழரும் திரைத் துறை எழுத்தாளருமான த.அறிவழகன் தந்தையார் தர்மலிங்கம் ( மேனாள் திமுக கிளைச் செயலாளர்) மறை வெய்தியதை ஒட்டி நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்ச்சி 12.12 .2024 அன்று காலை 11 மணி அளவில் வெளி கூனங்குறிச்சியில் ஜி.டி.போஸ்கோ தலைமையில் குறிஞ்சிப்பாடி கழக தலைவர் தா.கனகராசு முன் னிலையில் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் மறைந்தவரின் படத்தினை திறந்து வைத்து நினைவு உரையாற்றினார். சேப் பளாநத்தம் வரதராஜன், எழுத்தாளர் விஜயராஜ், பேராசிரியர் சிற்றரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமைக் கழக பொறுப்பாளர் குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு நினை வுரை ஆற்றினர். அனைவ ரையும் வரவேற்று பய னாடை போர்த்தி கவிஞர் அறிவழகன் சிறப்பு செய்தார். நிறைவாக த.அன்பழகன் நன்றி கூறினார்.
வெளி கூனங்குறிச்சி தர்மலிங்கத்தின் நினைவேந்தல்-படத்திறப்பு!

Leave a Comment