தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இணைய வழி மூலம் பெற “Kooturavu” என்ற அலைபேசி செயலி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், கடன் விண்ணப்பத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், தகுதியானோருக்கு உடனடியாக கடன் வழங்கப்படுகிறது. இதுவரை செயலி மூலம் 5,034 பேர் விண்ணப்பித்ததில், 4,900 பேருக்கு ₹60 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.