தனக்கென்று தனிமொழி நடை, எழுத்து நடையை கொண்ட மொழி “தமிழ்” என்பது நிரூபணமாகியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அசோகர் காலத்திற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, தனக்கென தனி முறையை பின்பற்றிய இனம் தமிழினம் எனக் குறிப்பிட்ட அவர், அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ் மொழி வந்தது என்ற கோட்பாட்டை தற்போது, தொல்லியல் ஆய்வுகள் அறிவியல்பூர்வமாக நிரூபித்து உடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.