விழுப்புரம் கழக மாவட்டம் சேந்தநாட்டில் பெரியாரியல் பட்டறையில் ‘தந்தை பெரியார் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் முதல் வகுப்பை நடத்தினார் (22.07.2023) விழுப்புரம் மாவட்ட தலைவர் சுப்பராயன், மாவட்ட செயலாளர் சேந்தநாடு பரணிதரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன், தலைமை கழக அமைப்பாளர் இளம்பரிதி, கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் க.அன்பழகன், கழக பேச்சாளர் பூவைப் புலிகேசி, ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, கழகத் தொழில் நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், விழுப்புரம் நகர செயலாளர் பழனிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் பகவான் தாஸ், மாவட்ட ப.க. தலைவர் திருநாவுக்கரசு, விழுப்புரம் நகரத் தலைவர் பூங்கான் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியார் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
விழுப்புரம் கழக மாவட்டம் சேந்தநாட்டில் 95 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
Leave a Comment